"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/12/16

சுல்பிகார் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதை செயலிழக்க செய்வதற்காக ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 54 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
1944ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஆக்ஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனது குறிப்பித்தக்கது 1.8 டன் எடை கொண்ட அந்த குண்டு பிரிட்டிஷ் படைகளால் வீசப்பட்டவை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் அப்பகுதியில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வெடிகுண்டை யாரும் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியையொட்டி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.