Mohammed Farook Mohammed Farook Author
Title: முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (தொடர்- 15)
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
பிரிவு 10 - பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : தொடர்ச்சி  4. கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்...
பிரிவு 10 - பெண்ணின் கண்ணியத்தையும் கற்பையும் பாதுகாக்கும் சட்டங்கள் : தொடர்ச்சி 

4. கற்பிற்கு ஆபத்து ஏற்படும் காரணங்களில் ஒன்று அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் தனிமையில் இருப்பதாகும்.
''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பும் ஒருவர் அவளிடம் திருமணம் தடைசெய்யப்பட்ட நபர் இல்லாத நிலையில் எந்தப் பெண்ணுடனும் தனிமையில் இருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் ஓர் ஆணுடன் தக்க துணையின்றி தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் அங்கு மூன்றாவது நபராக ஷைத்தான் புகுந்துவிடுவான்.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (நூல்: அஹ்மத்)
''எந்த ஓர் ஆணும் எந்த ஒரு அன்னியப் பெண்ணு டனும் தனிமையில் இருக்கவேண்டாம். ஏனெனில் ஷைத்தான் மூன்றாவது நபராக வந்து விடுகின்றான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என ஆமிர் இப்னு ரபீஆ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார். (நூல்: அஹ்மத்)

இமாம் ஷவ்கானி நைலுல் அவ்தார் 61ழூ ழூ20 என்ற நூலில் குறிப்பிடுகிறார். அன்னியப் பெண்ணுடன் தனி மையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என அறிஞர்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். தடுக்கப்படுவதற்குக் காரணம் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தனிமையில் இருக்கும்போது ஷைத்தான் மூன்றாமவனாக இருக்கிறான் என்ற ஹதீஸாகும். ஷைத்தான் வந்துவிட்டால் அவன் பாவத் திலே அவ்விருவரையும் வீழ்த்தி விடுகிறாள். ஆனால் திருமணம் செய்ய தடைசெய்யப்பட்ட ஆணுடன் இருக் கும்போது அந்நியப் பெண்ணுடன் தனித்திருப்பது அணு மதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இங்கு பாவம் நடப்பதற் குண்டான சாத்தியம் மிகமிகக்குறைவாக உள்ளது.
சில பெண்களும், அவர்களுடைய பொறுப்புதாரிகளும் அன்னிய ஆணும் அன்னிய பெண்ணும் பலவகைகளில் தனிமையில் இருப்பதைப் பற்றி பொருட்படுத்தாது இருக்கின்றனர்.

ஒரு பெண் தன் கணவனின் ஆண் உறவினருடன் இருப்பது. அவர் முன் முகத்தைத் திறந்து நிற்பது இது எல்லா நிலையையும் விட மிக ஆபத்தானது.
''அன்னியப் பெண்கள் தனியாக இருக்கும் இடத்திற்குள் நுழையாதீர்கள்.' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, அன்சாரித் தோழர்களில் ஒருவர், 'கணவனின் சகோதரனும் செல்லக்கூடாதா?' எனக் கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், வெறுப்பாக அதை மரணத்துடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார்கள்''
இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) பத்ஹுல்பாரி என்ற நூலின் 9ழூ ழூ331 ல் குறிப்பிடுகிறார்.

இமாம் நவவீ கூறுகிறார். கணவனின் உறவினர்கள் என்பது அவனுடைய தந்தை, அவனுடைய தந்தையின் உடன் பிறந்தோர், சகோதரர்கள் சகோதரரின் மகன், தந்தையின் உடன் பிறந்தோரின் மகன் போன்ற வர்களாவார்கள்.
என்றாலும் மேலுள்ள ஹதீஸில் கணவனின் தந்தை கணவனின் மகன்கள் சேரமாட்டார்கள். ஏனெனில், இவர்களைத் திருமணம் செய்வது அவளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்கள் அவளுடன் தனிமையில் இருப்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தில் சகோதரன் தன் சகோதரன் மனைவியுடன் தனிமையில் இருப்பதை பார்க்கமுடிகிறது. இதை இலேசாகவும் நினைக்கின்றனர். இது மிகப்பெரிய தவறாகும். 

இதுதான் மரணத்திற்கு ஒப்பானது, இது தடுக்கப்பட வேண்டியதாகும். இமாம் ஷவ்கானி நைனுல் அவ்தார் 9ழூ ழூ331 ல் குறிப்பிடுகிறார். கணவனின் உறவினர் (சகோதரருடன்) ஒருபெண் தனிமையில் இருப்பதை மரணத்திற்கு ஒப்பிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதன் நோக்கம் அதனால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சத்தின் காரணத்தினால் தான். மரணத்தினால் ஏற்படுகின்ற விபரீதத்தின் அச்சம் மற்றவைகளினால் ஏற்படுகின்ற அச்சத்தை விட எவ்வாறு அதிகமானதாக உள்ளதோ அதைப் போன்றே இதுவும் இருக்கிறது.

இஸ்லாமியப் பெண்ணே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! இந்த விஷயத்தில் பொடுபோக்காக இருக்காதே! மக்கள் பொடுபோக்காக இருந்தாலும் சரியே நீ அப்படி இருக்காதே! ஏனெனில் ஷரீஅத்தின் சட்டம்தான் கவனிக்கப்பட வேண்டுமே தவிர மக்களின் பழக்க வழக்கங்கள் அல்ல.
2. திருமண உறவு விலக்கப்படாத ஆண் டிரைவர்களுடன் பெண்கள் தனியாகப் பயணம் செய்கின்றனர். இதில் சில பெண்களும், அவர்களின் பொறுப்பாளர்களும் மெத்தனமாக இருக்கின்றனர். இவ்வாறு ஆணுடன் தனிமையில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஷேக் முஹம்மத் இப்னு இப்ராஹீம் ஆலு ஷேக் ச¥தி அரோபியாவில் மார்க்க தீர்ப்பு வழங்குபவராக இருந்தவர். மார்க்க தீர்ப்பு தொகுப்பு 10ழூ ழூ52 ல் குறிப்பிடு கிறார். ''எவ்வித சந்தேகமுமின்றி, ஒரு பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் பயணம் செய்வது பம்ரங்கமாக வெறுக்கப் பட்டுள்ளது. இதனால் பலவிதமான குழப்பங்கள் உள்ளன. இதை யாரும் இலேசாகக் கருதிவிடமுடியாது. இதில் எவ்வளவுதான் பத்தினிப் பெண்ணாக இருந்தாலும் கண்ணியமான பெண்ணாக இருந்தாலும் சரிதான்.''

இப்படி செல்வதை தனது பெண்ணுக்கு அனுமதிப்பவன் மார்க்கப்பற்றும் தன் பெண்கள் விஷயத்தில் ரோஷம் குறைந்தவனாகவும் இருப்பான்.
''ஓர் ஆண் ஒரு அன்னிய பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒரு பெண் ஓர் ஆணுடன் வாகனத்தில் தனிமையில் பயணம் செய்வது வீட்டில் தனிமையில் இருப்பதை விட மிக மோசமானதாகும். ஏனெனில் வாகனத்தின் மூலம் அவளை ஊருக்கு உள்ளேயோ, ஊருக்கு வெளியேயோ, அவள் விரும்பியோ, விரும்பாத நிலையிலோ எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். இதன் மூலம் பயங்கரமான குழப்பங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பெண்ணுடன் துணைக்குச் செல்லுகின்றவர்கள் பெரிய வயதுடையவர்களாக இருக்கவேண்டும். சிறிய குழந்தைகள் மட்டும் இருப்பது போதாது. குழந்தையை உடன் எடுத்துச் சென்றால், அதைத் தனிமையாகக் கருத முடியாது என சில பெண்கள் நினைக்கின்றனர். இது தவறாகும்.
இமாம் நவவி தம்முடைய மஜ்மூவு 9ழூ ழூ109 ல் குறிப்பிடுகிறார்.

ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் தனிமையில் மூன்றாவது நபர் இல்லாது தனித்திருப்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி தவறாகும். இவ்வாறே அவளு டன் வெட்கத்தலங்களைப் பற்றி நன்கு அறியாத சிறிய குழந்தைகள் இருப்பதால் அவள் தனிமையில் இருக்க வில்லை என்று வாதிட முடியாது.
3. சில பெண்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறோம் என்ற பெயரில் தனிமையில் மருத்துவரிடம் செல்லும் விஷயத்திலும் பொடுபோக்காக இருக்கிறார்கள். இது பெரும் தவறாகும். இது ஆபத்தையும் விளைவிக்கும். இறையச்சமுள்ள யாராலும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
முஹம்மத் இப்னு இப்ராஹீம் அவர்கள் ஃபத்வா தொகுப்பு 10ழூ ழூ13 ல் குறிப்பிடுகிறார்கள்.

எப்படி இருந்தாலும், ஒருபெண் அன்னிய ஆண் களுடன் தனிமையில் இருப்பது மார்க்க அடிப்படையில் தடுக்கப்பட்டுள்ளது. அது சிம்க்சை செய்யும் மருத்து வருடனாக இருந்தாலும் சரியே. ஏனெனில்,
''ஒருபெண் ஓர் ஆணுடன் தனிமையில் இருக்கும்போது மூன்றாவதாக ஷைத்தான் இருக்கிறான்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவளுடன் அவளுடைய கணவன் அல்லது வேறு யாராவது ஒருவர் இருக்கவேண்டும். இல்லையென்றால் சொந்தத்தில் உள்ள குடும்பப் பெண்கள் அவளுடன் இருக்கவேண்டும். அதுவும் இல்லையென்றால் ஆபத் தான நிலையில் குறைந்தது ஒரு நர்ஸாவது அவளுடன் இருந்தாகவேண்டும்.
அவ்வாறே நெருங்கிய நண்பர்களாயினும், பணியா ளாயினும் ஒரு மருத்துவர் அன்னியப் பெண்ணுடன் தனித்திருப்பதும் கூடாது. கண்பார்வையற்ற ஆசிரியர் மாணவியுடன் தனிமையில் இருப்பதும், விமானப் பணிப் பெண் அன்னிய ஆணுடன் தனிமையில் இருப்பதும் கூடாது. நவநாகரீகம் என்ற பெயரில் இறைமறுப்பாளர் களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலும், மார்க்க விஷயங்களைப் பொருட்படுத்தாமலும் இலேசாகக் கருதுகின்றனர்.

''லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்''
தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் ணுடன் ஓர் ஆண் தனிமையில் இருப்பதோ, அவ்வாறே ஒருபெண் தன் வீட்டில் பணிபுரியும் ஆணுடனும் தனிமையாக இருப்பதோ கூடாது. வீட்டுப் பணியாளர் களால், பலர் பெரும் சோதனைக்குள்ளாகிறார்கள். இதுவும் பெரும் பாதிப்பை உண்டாக்குவதாகும். பெண்கள் கட்டுப்பாடின்றி தங்கள் வீட்டிற்கு வெளியில் வேலைக்குச் செல்வதால் இவ்வாறான நிலைகள் ஏற்படுகின்றன. இறைநம்பிக்கையுள்ள ஆண்களும், பெண்களும் இன்றைய காலச் சூழலில் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். அவசியம் மற்றும் அவசரமான வேலைகளுக்கு மட்டும் வெளியில் செல்ல வேண்டும். தீய பண்புகளைத் தூர்வாறவேண்டும்.

 கைலாகுச் செய்தல் (முஸாஃபஹா) :
ஒருபெண் அன்னிய ஆண்களுடன் கைலாகு (முஸாஃபஹா) செய்தல் தடுக்கப்பட்டுள்ளது.
ஷேக் அப்துல் அªஸ் இப்னு பாஸ் அவர்கள் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டு நிறுவனம் மூலம் வெளியிட்டுள்ள மார்க்கத்தீர்ப்புகள் தொகுப்பு 1ழூ ழூ185 ல் குறிப்பிடுகிறார்கள்.

ஒருபெண் பிறஆண்களுடன் கைலாகு செய்வது பொதுவாகக் கூடாது. அவர்கள் குமரிப் பெண்களாகவோ, வயோதியர்களாகவோ இருப்பினும் சரியே. கைலாகு செய்பவர் இளைஞராகவோ, வயோதியராகவோ இருப்பினும் சரியே. ஏனெனில் இதனால் இருசாராரும் உணர்ச்சிகளால் உந்தப்படும் அபாயம் இருக்கிறது.

''நான் பெண்களிடத்தில் கை கொடுக்க மாட்டேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னியப் பெண்களின் கரத்தைத் தொட்டதில்லை. வாய் மூலமாகத்தான் அவர் களிடம் பைஅத் எனும் உறுதிமொழி வாங்குவார்கள்'' என ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்.
கைலாகுச் செய்யும் போது கை உறை அணிந்திருந் தாலும், அணியாமலிருந்தாலும் இது கூடாது. குழப்பத் தின் வாயில்களை அடைப்பதற்காக சட்டங்கள் இவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன.
ஷேக் முஹம்மத் அமீன் »ன்கீதி தம் அள்வாவுல் பயான் என்ற தப்ªரில் 6ழூ ழூ602,603 ல் குறிப்பிடுகிறார். அறிந்து கொள்! ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் கைலாகுச் செய்வது கூடாது. ஓர் ஆண் அன்னியப் பெண்ணுடன் உடலுடன் உடல் உரசுவதும் கூடாது.

 இதற்கான ஆதாரங்கள் பல :
1. ''நான் பெண்களுடன் கைலாகுச் செய்யமாட்டேன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: ''அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றி பெண்களுடன் கைகுலுக்காதிருப்பது ஆண்கள் மீது கடமையாகும்.
இந்த ஹதீஸ்பற்றிய விளக்கத்தை 'ஹஜ்' அத்தியாயத்தில் தெளிவாக விளக்கியுள்ளோம். ஹஜ்ஜின்போது இஹ்ராம் அணியும் நேரத்திலும் மற்ற நேரங்களிலும் சாயமிடப்பட்ட ஆடைகளை ஆண்கள் பொதுவாகவே அணிவது கூடாது எனச் சட்டம் கூறும் போது இதைக் கூறியுள்ளோம்.

'அஹ்ஸாப்' அத்தியாயத்தில் பர்தாவைப் பற்றி வந்துள்ள வசனமும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிற பெண்களி டம் உறுதி மொழி பெறும்போதும், கை குலுக்கமாட் டார்கள் என வந்திருப்பதும் ஆண்கள் பெண்களுக்கு கைகொடுக்கக் கூடாது என்பதற்கு தெளிவான ஆதாரங் களாகும். மேலும் பெண்ணின் உடம்பில் எந்தப் பாகத்தை யும் தொடக்கூடாது. ஏனெனில் தொடுதல் என்பதன் இறுதி நிலைதான் கைகொடுத்தல் எனப்படுகிறது.

கை கொடுப்பது முக்கிய நேரமான உடன்படிக்கை யின் போதே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் bஅவர்கள் பெண்களிடம் கை கொடுக்கவில்லை என்றால் எந்த நேரத்திலும் அது கூடாது என்பதற்கு இது ஆதாரமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர் களுக்கு மாறு செய்யும் துணிச்சல் யாருக்கும் இல்லை. ஏனெனில் அவர்கள் தம் உம்மத்தினருக்குச் சொல் செயல் மற்றும் அங்கீகாரம் மூலம் சட்டம் கொடுத்த வல்லுனர்.

2. நாம் முன்னர் கூறியது போன்று ஒருபெண் தன்னை முழுவதுமாக மறைக்கப்பட வேண்டியவளாக இருக்கிறாள். எனவே அவள் தன்னை மறைத்துக் கொள்ள வேண்டியது அவள் மீது கடமையாகிறது. பார்வையைத் தாழ்த்துமாறு கட்டளையிடப்பட்டதன் நோக்கம் மனித குலம் தவறுகளில் விழாமலிருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சந்தேகமின்றி உடலும் உடலும் உரசுவது உணர்வுகளைத் தூண்ட வலுவானதாக அமைகிறது. கண்ணால் பார்ப்பதால் ஏற்படும் தீங்கை விட இது மிகப் பெரிய தீங்காகும். இதை நடுநிலையான எல்லோரும் நன்கு அறிவர்.

3. கை கொடுப்பது அன்னியப் பெண்களுடன் இன்பம் அனுபவிப்பதற்குக் காரணமாகிறது. குறிப்பாக இறையச்சம் குறைந்து, நம்பிக்கை இழந்து, பேனுத லற்றுப்போன இக்காலத்தில் தவறுகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. கணவன்மார்களில் சிலர் மனைவியின் சகோதரியின் வாயில் வாய் வைத்து முத்தமிட்டு ஸலாம் கொடுக்கும் பழக்க முடை யவர்களாக இருக்கின்றனர். இதை ஸலாம் சொல்லும் முத்தம் என்று கூறுகின்றனர். இது அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துப்படி தடுக்கப்பட்டதாகும். அவளுக்கு ஸலாம் சொல்லுதல் என்றால் அவளுக்கு முத்தமிடுதல் என்று பொருள் கொள்கின்றனர்.

சந்தேகத்திற்கு இடமின்றி உண்மை எதுவென்றால், இதுபோன்ற எல்லாத் தவறுகளை விட்டும் அதற்குக் காரணமாக இருப்பவைகளை விட்டும் தூரமாக இருப்பதுதான்.

 முடிவுரை :
இறைநம்பிக்கையுள்ள ஆண்களே! இறைநம்பிக்கையுள்ள பெண்களே! பின்வரும் அல்லாஹ்வின் உபதேசத்தை உங்களுக்கு மீண்டும் நினை¥ட்டுகிறேன்.

''நபியே! இறைநம்பிக்கையுள்ள ஆண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளட்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.

இன்னும், இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு நீர் கூறும்! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளட்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ளட்டும். தங்கள் அலங்காரத்தை, அதிலிருந்து சாதார ணமாக வெளியில் தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டா திருக்கட்டும். இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ளட்டும். மேலும், (இறைநம்பிக்கையுள்ள பெண்கள்) தங்கள் கணவர்கள் அல்லது தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள், அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள் அல்லது தம் சகோதரரிகளின் புதல்வர்கள் அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் கீழ் உள்ள அடிமைகள் அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் பெண்களை விரும்பமுடியாத அளவு வயதானவர்கள் அல்லது பெண்களின் மறைவான அங்கங் களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள், ஆகிய இவர்களைத் தவிர வேறு ஆண்களுக்குத் தங்களுடைய அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.

மேலும் தாங்கள் மறைத்து வைக்கும் அலங்காரங்களிலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை ப+மியில் தட்டி நடக்கவேண்டாம். மேலும், இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் பாவமன்னிப்புக்கோரி நீங்கள் வெற்றிபெறுவதற்காக நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.'' (அல்குர்ஆன் 24:30,31)

எல்லாப்புகழும், அகிலங்களைப் படைத்து வளர்த்து இரட்சிக்கின்ற அல்லாஹ்வுக்கே! நம் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களின் தோழர்களின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் உண்டாவதாக!

ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான், தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனி.
வெளியீடு : அறிவு ஆராய்ச்சி மற்றும் மார்க்கத்தீர்ப்பளிக்கும் தலைமையகம், ரியாத். . 
...................................முற்று.................

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top