"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
22/12/16


2017ம் ஆண்டு, ஜனவரி 1-ந்தேதி முதல் சமையல் கேஸ் கட்டணத்தை ஸ்வைப்பிங் மெஷினில் கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் செலுத்தும் திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக அனைத்து நிறுவன கேஸ் முகவர்களும் ஸ்வைப் மெஷின் வாங்கக்கூறி பெட்ரோலியம் எண்ணெய் எரிவாயு அமைச்சகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்ப்பட்டுள்ளது.

 ஜனவரி 1-ந்தேதி முதல் வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் சப்ளை செய்ய வரும் அனைத்து நபர்களும் தங்களுடன் ஸ்வைப்பிங் மெஷினை எடுத்து வருவார்கள். அவர்களிடம் நாம் கார்டுகள் மூலம் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

ரூபாய் நோட்டு அறிவிப்பையடுத்து வங்கி, ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் அத்தியாவசியத் தேவைக்குபணம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்.நாட்டிலும் பணத்தட்டுப்பாடு கடுமையாக இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல், மத்தியஅரசு மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதற்கு ஏற்றார்போல் பொதுத்துறை நிறுவனங்களையும் டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற்றி வருகிறது.அதன் வெளிப்பாடாகவே, கியாஸ் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்துவதாகும்.

இது குறித்து "இன்டேன் கேஸ்" நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், " மத்தியஅரசின் உத்தரவுப்படி, பணமற்ற பொருளாதாரத்தை கொண்டு வர அனைத்து வரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அதன் நடவடிக்கையாக, அனைத்து கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் நபர்களுக்கும் "ஸ்வைப்பிங் மெஷின்" தரப்பட உள்ளது

விகளத்தூர் எக்ஸ்பிரஸ் கருத்து!
மத்திய அரசு மீண்டும் ஒருமுறை சாமானிய மக்கள் மீது போரை தொடுத்துள்ளது ,
எடிஎம் இல்லாத மக்களின் நிலை என்ன?
தன் பனத்தை எடுக்க வங்கி வாசலில் காத்திருந்தது போல இனி மாதம் ஒருமுறை தன் நன்பர்களிடம் எடிஎம் கார்டு வாங்க காத்திருக்க வேண்டியதுதான்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.