"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
5/12/16

முதல்வர் உடல்நலம் - எஸ்.டி.பி.ஐ. கட்சியின் டிச.06 போராட்டங்கள் ரத்து!

இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ./கட்சியின் மாநில தலைவர்/கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் உடல் நலனில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்ததை தொடர்ந்து, ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

மாண்புமிகு முதல்வர் அவர்கள் பூரண உடல்நலம் பெற்று, மீண்டும் அவர்கள் முதல்வராக மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

ஒட்டுமொத்த தமிழகமும் அதிர்ச்சியில் உறைந்துள்ள இந்நிலையில், நாளை (டிச.06) எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக தலைநகர் சென்னை உள்பட தமிழகத்தின் 41 இடங்களில் நடைபெறவிருந்த பாபரி மஸ்ஜித் - நீதிக்கான ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.