Mohammed Farook Mohammed Farook Author
Title: IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான தாக்குதல்: ஜாகிர் நாயக்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
புதுடெல்லி (26 நவ 2016): IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார...
புதுடெல்லி (26 நவ 2016): IRF மீதான தடை ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல் என்று டாக்டர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.
மார்க்க பிரச்சாரகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் 'இஸ்லாமிக் ரிசர்ச் பவுன்டென்சன்’ (ஐ.ஆர்.எப்) நிறுவனம் மத்திய அரசால் UAPA சட்டத்தின் கீழ் ஐந்து வருடங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த தடை குறித்து ஜாகிர் நாயக் இந்திய மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7     
"IRF ஐ தடை செய்வது குறித்து இந்திய அரசு பல மாதங்கள் முன்னரே திட்டமிட்டுள்ளது அதனை தற்போதுள்ள பணப்பிரச்சனைகளுக்கு நடுவே அறிவித்திருப்பது மக்களை திசை திருப்பத்தான். மத்திய அரசின் இந்த முடிவு அமைதி, ஜனநாயகம், நீதி மற்றும் முஸ்லிம்கள் மீதான மத்திய அரசின் தாக்குதல்.
தங்களது அமைப்பின் மீது மத்திய அரசு வித்தித்துள்ள இந்த தடையினை எதிர்த்து சட்ட ரீதியில் போராடுவோம். நீதித்துறை மத்திய அரசை அதன் திட்டத்தில் இருந்து தோற்கடித்துவிடும். தன்னிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் தங்களது அமைப்பை தடை செய்ததினால் தனக்கு அதனை சட்டரீதியிலாக அணுகுவதை தவிர வேறு வழியில்லை.
மத்திய அரசின் திட்டமே எவ்வழியிலாவது தன்னை சிக்க வைத்து விட வேண்டும் என்பது தான். IRF தடை உத்தரவே மக்களை நாட்டில் நிலவி வரும் பணக்குழப்பத்தில் இருந்து திசை திருப்பத்தான். செலவுக்கு பணமில்லாமல் வர்த்தகம் செய்ய முடியாமல், அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் கஷ்டப்படும் மக்களிடம் இருந்து பெரியளவில் எதிர்ப்பை எதிர்பார்க்க முடியாது.
தன்னுடையதாக கூறப்படும் போலியான வீடியோ ஒன்றை வைத்து இந்த தடையை அறிவித்திருக்கும் மத்திய அரசு, ஏன் யோகி அதித்யானாந்த், சாத்வி பிராச்சி போன்றோகளின் வெறுப்புப் பேச்சுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளவில்லை. “மக்களிடம் வெறுப்புப் பேச்சுகளை கூறி மத மோதல்களை உருவாக்கி அதில் அரசியல் ஆதாயம் தேடும் இது போன்றோர்களுக்கு சட்டம் பொருந்தாது போலும். இவர்களின் பேச்சுக்களுக்காக இவர்கள் மீது அரசு சட்ட நடவடிக்கைகளை எடுப்பதை விடுங்கள், இவர்களின் இந்த செயலை அரசு கண்டிக்கவும் இல்லை அவர்களை கைது செய்யவும் இல்லை. இந்த கொடுமையான சட்டம் முஸ்லிம்களுக்கு மேல் பயன்படுத்த மட்டும் தானா?”.
மேலும் அரசின் இந்த நடவடிக்கையை வெறுமனே தன் மீதான தாக்குதல் என்று மட்டும் கருதிவிட வேண்டாம் என்றும் இது ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்கள் மீதான தாக்குதல். இவ்வாறு ஜாகிர் நாயக் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
- onlineoodagam

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top