"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

புதிய ரூ2,000 அல்லது ரூ5,00 நோட்டை ஸ்கேன் செய்தால் பிரதமர் மோடியின் உரை இடம்பெறக் கூடிய வகையில் வடிமைக்கப்பட்ட ஒரு ஆப் வைரலாக பரவி வருகிறது. அதே நேரத்தில் இது புதிய ரூபாய் நோட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு புதியதாக ரூ500, ரூ2,000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதனால் 10 நாட்களுக்கும் மேலாக புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு நாசமாகி கிடக்கிறது.

அதே நேரத்தில் புதிய ரூ2,000, 500 நோட்டுகள் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதை கேள்விக்குள்ளாக்கும் வகையில் புதிய ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 'Modi keynote' என்ற ஆப்பை நீங்கள் உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இன்ஸ்டால் ஆன பின்னர் Scan 500 or 2000 Rs notes click below என்ற ஆப்சன் வரும்... அப்போது உங்களது ரூ2,000 அல்லது ரூ500 நோட்டை மொபைல் மூலமாக ஸ்கேன் செய்தால், பிரதமர் மோடி கருப்புப் பணம் குறித்து கோவாவில் கண்ணீரும் கம்பலையுமாக ஆற்றிய உரை ஆட்டோமேடிக்காக ஒளிபரப்பும்.

அதே நேரத்தில் பழைய ரூபாய் நோட்டுகள் எதையும் இந்த ஆப் மூலம் ஸ்கேன் செய்யவே முடியாது. இந்த ஆப் செயலிழந்து போய்விடும். இந்த ஆப் தற்போது வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. புதிய ரூபாய் நோட்டுகள் முக்கிய அம்சங்களை உள்வாங்கி இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளதால் அவை பாதுகாப்புக்குரியதுதானா? என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.