vkrnajur vkrnajur Author
Title: யாராவது கடவுளை பார்த்ததுண்டா? குஷ்பு கேள்வி !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
சமீபகாலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வரும் பிரபலங்களில் ஒருவர்  நடிகை குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான இவர்...
சமீபகாலமாக தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வரும் பிரபலங்களில் ஒருவர்  நடிகை குஷ்பு. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான இவர் சமீபத்தில் கூட ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது 'பொது சிவில் சட்டத்திற்கு' ஆதரவாக தனது கருத்தினை பதிவு செய்து  காங்கிரஸ் கட்சிக்குளே சர்ச்சையை கிளப்பினார். இந்நிலையில் தற்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் வாசகர்கள் எழுப்பிய பல சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு மிக சாதுர்யமான பதில்களை சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அப்படி என்ன தான் கேள்வி எழுப்பப்பட்டது? நடிகை குஷ்பு சமீபகாலமாக இஸ்லாம் மதத்தையே பின்னப்பற்றுவதில்லை எனவும் ... அந்த  நினைப்பையே அவர் மறந்துவிட்டதாகவும் ஒருவர் பதிவு செய்திருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு ''Pls learn 2 understand tat every1 is born a human first..Allah,Bhagwan n Jesus r beliefs..has anyone seen God? It's omnipresent in ur deeds.” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்தார். அதாவது " இந்த உலகத்தில் முதலில் எல்லோரும் மனிதர்கள்.... அல்லா, பகவான், ஜீசஸ் போன்றவர்களை நாம் கடவுளாக நம்புகிறோம். உண்மையாகவே யாராவது கடவுளை பார்த்ததுண்டா ? நாம் செய்கின்ற ஒவ்வொரு நல்ல காரியங்களிலும் தான் கடவுள் நிறைந்துள்ளார்" என  கூறி இருந்தார்.

உடனே மற்றொரு நபர் 'உங்கள் குழந்தைகள் எந்த மதத்தை பின்பற்றுகிறார்கள்?' என கேள்வி கேட்டதற்கு. உடனே நடிகை குஷ்பு “Just as we,the parents..Humanity is their religion n being an INDIAN is their community.” என  பதிலளித்தார். அதாவது இந்தியன் என்ற சமூகத்தில் மனிதநேயம் என்ற மதம் தான்... தன் பிள்ளைகளின் அடையாளம் என சாதுர்யமாக கூறியுள்ளார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top