"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
22/11/16

இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்கள் அடங்கிய இணையதளங்கள், சமூக வலை தளங்களை பாஜக அரசு முடக்கி உள்ளது.

மத போதகரான ஜாகிர் நாயக், மறைமுகமாக பயங்கரவாத அமைப்புக்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதி வழங்கி வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான மும்பையில் உள்ள 10 இடங்களில் கடந்த வாரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத லட்சகணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. ‛இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்’ என, ஜாகிர் நாயக்கிற்கு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7   

இந்நிலையில் இன்று, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜாகிர் நாயக் பேசிய உரைகள் அடங்கிய இணையதளங்களை மத்திய அரசு முடக்கி உள்ளாத தகவல் வருகிறது.

அவரது புகழை பரப்புவதற்காக துவங்கப்பட்ட பேஸ்புக் பக்கம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஜாகிர் நாயக்கின் பேஸ்புக் பக்கத்தை முடக்குவது தொடர்பாக அமெரிக்க நிர்வாகத்தினரிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.