"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
14/11/16

பொதுவாகவே மாணவர்கள் அரசியல் பேசினால் ‘படிக்கிற வயதில் எதற்கு அரசியல்?’ என்று இந்த சமூகம் மாணவர்களை நோக்கி கேள்விக்கணைகளைத்  தொடுக்கிறது. ஆனால், மாணவர்கள் படிக்கிறபோது அவர்களின் பாடத்திட்டம், தேர்வு நாள்,தேர்வு முறை முதல் வேலைவாய்ப்பு வரை அனைத்தையும் நிர்ணயிப்பது, வரையறுப்பது அரசியல். மாணவர்களுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த சமூகத்தின் இயக்கத்திற்கும் அச்சாணியாக இருப்பதும் அரசியல்தான்.
இன்றைய நிலையில் ‘அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்கள்’ என்றால், எப்படி இந்த நிலை உருவானது?அரசியல் எப்படி அயோக்கியர்களின் கூடாராமாக மாறிப் போனது? கற்றவர்களும், அறிஞர்களும், சான்றோர்களும்,நல்லோர்களும் அரசியலுக்கு வரத்தயங்கி விலகி நின்றதன் விளைவாக, சமூக விரோதிகளும்,அயோக்கியர்களும் அந்த இடத்தை நிரப்பினார்கள்.

’தேர்தல் பாதை திருடர் பாதை’ என்றால், நாம் அந்த தேர்தல் பாதையில் செல்லாது விலகி நின்றதால் திருடர்கள் அதனை ஆக்கிரமித்து, தங்கள் பாதையாக  அமைத்துக்கொண்டார்கள்.நாட்டிலே அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள்,கொள்ளை அடிக்கிறார்கள்,நாட்டை கூறு போடுகிறார்கள், சுரண்டுகிறார்கள்,கருப்பு பணத்தை ஒதுக்குகிறார்கள்,

பதுக்குகிறார்கள் என்று பேசும் நாம் அந்த அரசியலை தேவையற்றது என்று விலகிச்செல்வதுதான் நாம் செய்யும் பெரும்பிழை; நம் எல்லாப் பிரச்சனைகளுக்குமான மூலக்காரணம். ‘சனநாயகம் செத்துவிட்டது; அரசியலில் நம்பிக்கையில்லை’, என்று அரசியலில் நம்பிக்கை இல்லாத இயக்கங்கள், கட்சிகள், தலைவர்கள்கூட ஆர்ப்பாட்டம் நடத்துவது,போராட்டம் செய்வது,கோரிக்கை வைப்பது,வற்புறுத்துவது, கண்டனம் தெரிவிப்பது என்று எல்லாம் அரசியலை அடிப்படையாகக்கொண்ட அரசுகளை நோக்கித்தான் வைக்கிறார்கள்.

பல மாணவர்கள், இளைஞர்கள் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் ‘அரசியலில் நம்பிக்கையில்லை’, ‘ஆர்வமில்லை’ என்று பதிவு செய்கிறார்கள். ஆனால்,அந்த சமூக வலைத்தளங்களில் கருத்துபோடும் உரிமையைக்கூட அரசியலை அடிப்படையாகக்கொண்ட அரசுதான் நிர்ணயிக்கிறது.நாம் இன்று நம் தெருவில் ஒரு பிரச்சினை என்று ஒரு கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டம், ஆர்ப்பாட்டம்,பொதுக்கூட்டம்,பேரணி என்று நடத்துவதென்றால் அதற்கு அனுமதிகோரி காவல்துறையை நாடுகிறோம்.

அந்த காவல்துறையும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருக்கிறது.அப்படி, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தினால்கூட அனைத்து கோரிக்கைகளையும், கருத்துகளையும் அரசை நோக்கியே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.இப்படி காவல்துறை,உளவுத்துறை முதல் அனைத்து துறைகளும் அரசின் கட்டுப்பாட்டின்கீழ்தான் இயங்குகிறது.அந்த அரசை, அரசியலே நிர்ணயிக்கிறது.நாம் வெறுத்தாலும், மறுத்தாலும் இந்த சமூகத்தை மட்டுமல்லாது, இந்த உலகத்தையே நேரடியாக, மறைமுகமாக அரசியல்தான் இயக்கிக் கொண்டிருக்கிறது.

எனவே,இந்த சமூகத்தின் அனைத்து நடவடிக்கைகளும்,இயக்கங்களும் அரசியலில்தான் துவங்குகிறது; அரசியலிலே முடிகிறது.அப்படிப்பட்ட அரசியலுக்கு மாணவர்கள் வந்துவிட்டால் கொள்ளை அடிக்கமுடியாது, ஊழல் செய்ய முடியாது என்று பயந்துதான் ‘அரசியல் மாணவர்களுக்கு தேவையற்றது’ என்று மாணவர்களை உளவியல்ரீதியாக மாற்றி, மாணவர்களின் கவனத்தை தொலைக்காட்சி, திரைப்படம், விளையாட்டு என  திசைதிருப்புகிறார்கள்.எனவே,  அரசியல் சாக்கடையாக இருந்தால், அந்த சாக்கடையில் இறங்கி,அதனை சுத்தப்படுத்த வேண்டியது இன்றைய இளம்தலைமுறை பிள்ளைகளாகிய மாணவர்களின் தலையாகிய கடமை. ஆதலால், அரசியல் நாறுவதும்,சந்தனமாய் மணப்பதும் உத்வேகமும்,ஆற்றலும் கொண்ட நாளைய இளைஞர்களாகிய இன்றைய மாணவர்களின் கையில்தான் இருக்கிறது.
மாணவர்களே!  முடிவு செய்யுங்கள்!!

மு.ஜலால்லுதீன்
வி.களத்தூர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.