Mohamed Farook Mohamed Farook Author
Title: ரூபாய் அறிவிப்பை எதிர்த்து வி.களத்தூரில் நாளை முழு கடையடைப்பு!
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நாளை கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. 500, 1000 ரூப...
பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நாளை கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் சில்லரை வணிகர்கள் பாதிக்கப்படுவதை கண்டிக்கும் விதமாக நாளை (திங்கள்கிழமை) தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சில்லரை வணிகத்தை அழிக்கச் செய்யப்பட்டிருக்கும் இந்த மோசடியை எதிர்த்து கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டங்கள் அறிவித்து உள்ளன. இந்த போராட்டங்களுக்கு வணிகர்களின் ஆதரவை தெரிவிக்கும் விதத்தில் நாளை தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பு செய்வது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை முடிவெடுத்திருக்கின்றது. தமிழகம் முழுவதும் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் இந்த கடையடைப்பில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வி.களத்தூரிலும் நாளை முழு கடையடைப்பு - என அனைத்து வியாபாரிகளின் நலச்சங்கம் வி.களத்தூர் அறிவித்துள்ளது.

வி.களத்தூரில் நாளை கடையடைப்பு என்பதால் பொதுமக்கள் நாளை வாங்கக்கூடிய பொருட்களை இன்றே வாங்கிக்கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top