Mohammed Farook Mohammed Farook Author
Title: 'திப்பு ஜெயந்தி' கறுப்பு தினமாக பா.ஜ.க அனுஷ்டிக்க முடிவு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பா.ஜ.க சார்பாக திப்பு ஜெயந்தி தினத்தை கருப்பு தினமாக அனுஷ்...
கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில பா.ஜ.க சார்பாக திப்பு ஜெயந்தி தினத்தை கருப்பு தினமாக அனுஷ்டித்துள்ளது.

கடந்த வருடம் முதல் கர்நாடகாவில் திப்பு ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த வருடம் மடிக்கேரியில் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழாவின் போது வன்முறை ஏற்பட்டு 2 பேர் கொல்லப்பட்டனர். திப்பு ஜெயந்தி விழாவிற்கு பா.ஜ.க உட்பட பல்வேறு ஹிந்து அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்வருடமும் திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதில் ஆளும் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது.

facebook வாயிலாக செய்திகளை அறிய
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.கவின் மாநில தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா கூறியதாவது, திப்பு ஜெயந்தியை கொண்டாடுவதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருக்கிறது. ஆனால் பா.ஜ.க சார்பில் திப்பு ஜெயந்தி தினத்தன்று கருப்பு தினமாக அனுஷ்டிக்கப்படும். 

கடந்த வருடம் பா.ஜ.க மற்றும் இந்து இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கடந்த வருடம் நடைபெற்ற திப்பு ஜெயந்தியைன் போதும் சில கொல்லப்பட்டுள்ளனர். இதே போன்ற கொலை சம்பவங்கள் இவ்வருடமும் தொடர்கதையாகிப்போயுள்ளது. 

இக்கொலைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்.ஐ.ஏ விசாரிக்க வேண்டுமென உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தேச விரோதிகள்தான் இக்கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டிருப்பார்கள் என நாங்கள் சந்தேகிக்கின்றோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

திப்பு ஜெயந்தி விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழ்ந்துவிடாமல் தடுக்க மாநிலம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top