Mohammed Farook Mohammed Farook Author
Title: வி.களத்தூர் சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய - பாப்புலர் ஃப்ரண்ட்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
வி.களத்தூரில் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஒரு பகுதியாக ...
வி.களத்தூரில் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற முழக்கத்துடன் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஒரு பகுதியாக இன்று (20.11.2016) சிறுவர்கள் விளையாட்டு போட்டி வி,களத்தூர் தெற்கு தெருவில் சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியை ஜனாப் S.அப்துல் ரஷீத் மிஸ்பாஹி (இமாம் ஜாமிஆ மஸ்ஜித்) அவர்கள் கொடியசைத்து 9.00 மணியளவில் போட்டினய துவக்கி வைத்தார் 
  
அதனை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. 50 மீ, 100 மீ, 400 மீ ஓட்டபந்தயம், தவக்களை ஓட்டம், மெதுவாக சைக்கிள் ஓட்டுவது, மெதுவாக பைக் ஊட்டுவது, சாக்குப்பை போட்டி, பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது, 400 மீ ரிலே, ஸ்பூன்லிங், என விறுவிறுப்பாக போட்டிகள் மாலை 5.50 வரை நடைபெற்றன. இந்த போட்டிகளில் 300க்கு அதிகமாக மாணவ, மாணவியர்கள் ஆர்வமாக மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு அருமையாக விளையாடினார்கள்.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு இன்ஷா அல்லாஹ் வருகிற 27.11.2016 ம் தேதி நடுத்தெருவில் நடைபெறும் நிறைவு விழா & பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்கப்படும்.
இந்த விளையாட்டு போட்டியில் பொதுமக்கள் அதிக அளவில் பார்வையிட வந்திருந்தனர்.

வாலிபால் போட்டி :
19.11.2016 அன்று நடைப்பெற இருந்த
வாலிபால் போட்டி 27.11.2016 அன்று காலை 7.00 மணியளவில் மில்லத்நகரில் நடைபெறும்.

இதுபோன்ற பல நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எங்களது வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்

முக்கிய குறிப்பு - எந்த இயக்கதிற்கும், அமைப்பிற்கும் ஜால்ர அடிக்கும் நிலைமை எங்களுக்கு இல்லை. ஊரில் நடக்கும் (எங்களுக்கு தெரிந்த) அனைத்து இயக்க, அமைப்பு சம்மந்தமான செய்திகளை நாங்கள் தொடர்ந்து வெளியிட்டு தான் வருகிறோம். இனி வெளியிடுவோம். நீங்கள் வகிக்கும் அமைப்பில், இயக்கத்தில் எதேனும் நிகழ்வு நடத்தினால் அதனை எமக்கு தெரியப்படுத்துங்கள். நிச்சியமாக வெளியிடு செய்வோம். இயக்க அமைப்பு வேறுபாடு எமக்கு இல்லை. இது சிலருக்காக... - முஹம்மது பாரூக். நிறுவனர்
 
 
 
 
 
 
 
 
 
 
விரைவில் புகைப்படங்கள் இணைக்கப்படும்.


About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top