"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/11/16

மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இருந்து கால்பந்து வீரர்களுடன் சென்ற விமானம் கொலம்பியா அருகே விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 72 பயணிகள் மற்றும் விமான சிப்பந்திகளுடன்  பொலிவியாவில் இருந்து  கொலம்பியா தலைநகர்  மெடலின்ஸ் சர்வதேச விமான நிலையத்துக்கு விமானம் சென்றதாக  என்று கூறப்படுகிறது.
 
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7     
 
விமானத்தில் பயணம் செய்த கால்பந்து வீரர்கள் தேசிய அணி வீரர்களா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. விமான விபத்தில் யாரேனும் உயிர் பிழைத்துள்ளார்களா? என்பது குறித்த விவரமும் இல்லை.
 
வரும் புதன்கிழமை தென் அமெரிக்காவில் நடைபெறும் கோபா சூடமெரிக்கா இறுதிப்போட்டியில் விளையாடுவதற்காக வீரர்கள் சென்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அட்லெடிகோ நசியோனல் அணிக்கு எதிராக இந்த போட்டி நடைபெற இருந்த நிலையில், விபத்தில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விமான விபத்தில் கால்பந்து வீரர்களின் கதி என்ன? குறித்து தகவல் இல்லை. இதற்கிடையே, பிரேசிலின் தேசிய அணி இல்லை எனவும் ஒரு கிளப் அணி எனவும் ஒரு தகவல் தற்போது கிடைத்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.