"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
15/11/16

எதிர்வரும் புனித ஹஜ் யாத்திரையின் போது இந்தியர்களுக்கு மிகுந்த பயனளிக்கும், மேம்படுத்தப்பட்ட மொபைல் ஆப் ஒன்றின் மூலம் இந்திய ஹஜ் கமிட்டி, தனியார் நிறுவனங்கள் மற்றும் சவுதியிலிருந்து வரும் இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கி ஒருங்கிணைக்கும் பணியினை 'இந்திய ஹஜ் கமிட்டி'யின் ஒத்துழைப்புடன் இந்தியன் ஹஜ் மிஷன் செய்து வருகிறது. இந்த இந்திய ஹஜ் மிஷன் தான் முதன்முதலாக 2014 ஆம் ஆண்டே ஜிபிஎஸ் மொபைல் ஆப்பையும் அறிமுகம் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பு ஹஜ் யாத்ரீகர்களின் தங்குமிட வழிகாட்டி (Indian Haj Accommodation Locator) எனப்பெயர் சூட்டப்பட்டிருந்த இந்த ஆப் இனி 'இந்திய ஹஜ் தகவல் அமைப்பு' (Indian Haj Information System) என புதிய பெயர் சூட்டப்பட்டு பல்வேறு புதிய அம்சங்களுடன் களத்திற்கு வந்துள்ளது. இந்த புதிய செயலியில் நவீன தொலைத்தொடர்பு தொழிற்நுட்பங்கள், வாட்ஸ்அப், டிவிட்டர், இலவச தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளும் இணைக்கப்படும். மேலும், ஹஜ் யாத்ரீகர்களுடைய விபரங்கள் யாவும் ஹஜ் கமிட்டி மூலம் பெறப்பட்டு இந்திய தூதரக சர்வரில் சேமிக்கப்படும்.

தற்போதுள்ள வசதியை விட 10 மடங்கு கூடுதல் வசதி மற்றும் தகவல்களுடன் இந்த புதிய மொபைல் ஆப் எதிர்வரும் ஹஜ் யாத்திரை காலம் துவங்குமுன் மேம்படுத்தப்பட்டு தயாராகிவிடும் என்றும் ஹஜ் யாத்ரீகர் ஒருவர் விண்ணப்பிக்கும் போதே அவர் குறித்த விபரங்கள் அனைத்தும் இந்த செயலியில் பதியப்படுவதுடன் அவருடைய விண்ணப்பத்தின் நிலை, விமான டிக்கெட் மற்றும் வருகை குறித்த நேர விபரங்கள், தங்குமிடம் குறித்த தகவல்கள், அவர் ஹஜ் யாத்திரை முடிந்து திரும்பச் செல்கின்ற வரையுள்ள தகவல்கள் என அனைத்தும் இந்த ஒருங்கிணைந்த செயலி வழியாக சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஹஜ் யாத்திரைக்காக ஒருவர் மக்கா வந்து இறங்குமுன்பே அனைத்து தகவல்களையும் தனது நுனிவிரலில் வைத்திருப்பார்.

மேற்காணும் புதிய செயலி குறித்த தகவல்களுடன் எதிர்வரும் ஹஜ் யாத்திரையின் போது இந்திய அரசின் சார்பாகவும் ஈ-பிரேஸ்லட் (e-bracelet) எனப்படும் தகவல் பட்டி ஒன்றும் யாத்ரீகர்களின் மணிக்கட்டில் அணிவிக்கப்படும் என இந்திய கவுன்சல் ஜெனரல் முஹமது நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் ஜெத்தாவில் தெரிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.