"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/11/16

எந்தவித சரியான முன்னேற்பாடுகளோ, மாற்று யோசனைகளோ இல்லாமல் மோடியால் செல்லாக்காசு என அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு அமீரகத்தில் பணிபுரியும் பல லட்சக்கணக்கான இந்தியர்கள் செய்வதறியாது விழித்துக் கொண்டுள்ளனர்.

இது எல்லாம் கள்ளப் பணமோ, கருப்புப் பணமோ அல்ல. அமீரகம் வாழ் இந்தியர்கள் அனைவரும் தாங்கள் ஊருக்கு செல்லும் போது தேவைப்படும் போக்குவரத்து செலவுகள் மற்றும் விமான நிலைய தண்டச் செலவுகளுக்காக மிக சொற்பளவில் அவரவர் சேமித்து வைத்திருப்பவை தான்.

இந்த சேமிப்பையும் தற்போது மாற்ற முடியாமல் தவித்து வருவதை தொடர்ந்து இந்திய தூதரக அதிகாரி நீதா பூஷன் அவர்கள் கூறும் போது, இதுவரை எங்களுக்கு இந்திய அரசிடமிருந்து எந்த வழிகாட்டலும் வரவில்லை என்றாலும் அரசின் அறிவுறுத்தலைக் கேட்டு அரசை அணுகியுள்ளோம் என்றும், இந்தியர்கள் கோருவது போல் பணத்தை மாற்றித் தர தூதரகத்தில் தனிக்கவுண்டர்கள் திறக்கும் திட்டம் ஏதுமில்லை என்றும் தெரிவித்தார்.

யுஏஇ எக்ஸ்சேஞ்ச் எனும் இந்தியருக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தில் இந்திய பணத்தை மாற்றித் தருவதாக வாட்ஸ்அப்பில் சிலர் வதந்தி பரப்பியதை தொடர்ந்து இங்கும் இந்தியர்கள் திரள துவங்கினர் ஆனால் புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை என்றும் சில்லறை நோட்டுக்களும் தங்களிடம் இல்லை என்றும் கையிருப்பில் உள்ள செல்லாத நோட்டுக்கள் தொடர்பாக அமீரக சென்ட்ரல் பேங்க்கின் அறிவுறுத்தலை எதிர்பார்ப்பதாகவும் முடித்துக் கொண்டார்.

மேலும், அமீரகத்தில் செயல்படக்கூடிய இந்திய அரசு வங்கியான 'பேங்க் ஆஃப் பரோடா'வும் செல்லாதது என மோடியால் அறிவிக்கப்பட்ட நோட்டுக்களை மாற்றித் தருவது குறித்து மூச்சுவிடவில்லை.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.