vkrnajur vkrnajur Author
Title: எழுந்து வா! வாழக்கை இனி நமதே !!!
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கனவுகள் கண்டது போதுமடா.. கொஞ்சம் கண் திறந்து பாரடா.. உன்னை சுற்றி உனக்கென்று ஒன்றும் இல்லையடா.. ஆசைகள் மட்டும் கோடி உனக்கு.. ...
கனவுகள் கண்டது போதுமடா..
கொஞ்சம் கண் திறந்து பாரடா..
உன்னை சுற்றி உனக்கென்று ஒன்றும் இல்லையடா..
ஆசைகள் மட்டும் கோடி உனக்கு..
ஆனால் உன் சம்பளமோ இன்னும் லட்சங்கள் தாண்டவில்லை..
வங்கியின் இறுப்போ நீ ஏற்றிற்கும் பொறுப்புக்கு சமந்தம் இல்லாதது..
 எண்ணற்ற கடன் வசதிகள் உண்டு இங்கே உன்னை அசதி ஆக்கிவிட..
சில்லரைகள் இல்லாமல் உன் சிரிப்புகூட உனக்கு சொந்தமில்லை...
 இப்படியே போனால் நீ காணாமல் போவாய்...
மேஜை மேல் அமர்ந்திருக்கும் உன் மரியாதைக்குரிய..
  மாயாபஜார் மாயாவிகளின் வார்த்தைகளை கேட்டு நீ மன்றாடியது போதும்..
உன் இளமையை உறிகின்ற கூட்டம் இங்கு பல உண்டு.. 
  உன் இளமையை உனக்கென்று உழைத்துக்கொள்..
கூச்சம் வேண்டாம் எந்த வேலையும் வேலையே !
  குறைகள் சொல்பவர்களை உன்னிடம் இருந்து குறைத்துக்கொள்..
இங்கு நீ மட்டும் தான் உனக்கு! ஏணியை பிடிக்க ஆள் தேடாதே..
  நீயாக மேலே போ, உயரத்தையும் ஆழத்தையும் கண்டு அஞ்சாதே...
தானே ஏறி போனவர்கள் பலர் உண்டு இங்கு..
 அவர்களை தொடர்ந்து நீயும் போ..
கனவில் மட்டும் இருந்தல்ல, நீயும் எழுந்து வா!
 வாழக்கை இனி நமதே !!!

- நஜூருதீன்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top