காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: ஹிதாயத் பள்ளியில் பேரிடர் மேலாண்மை அவசரகால மீட்பு போலி ஒத்திகை செயல்முறை விளக்கப் பயிற்சி நடைப்பெற்றது!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று (24.11.216) பேரிடர் மேலாண்மை அவசரகால மீட்பு போலி ஒத்திகை செயல்முறை விளக்கப் பயிற...
வி.களத்தூர் ஹிதாயத் நர்ஸரி மற்றும் பிரைமரி பள்ளியில் இன்று (24.11.216) பேரிடர் மேலாண்மை அவசரகால மீட்பு போலி ஒத்திகை செயல்முறை விளக்கப் பயிற்சி சிறப்பாக நடைப்பெற்றது.

பள்ளி தாளாளரும், முதல்வருமான அஹமது பாஷா தலைமையில் நடைப்பெற்றது. சதாசிவம் (fire officer) மற்றும் அவர்களின் தீயணைப்பு டீம் பேரிடர் மேலாண்மை அவசரகால மீட்பு போலி ஒத்திகைகளை மாணவ, மாணவிகளுக்கு செயல்முறையில் விளக்கம் அளித்தனர்

நிலநடுக்கம், பூம்பகம், சுனாமி, தீ விபத்து, இயற்கைப் பேரழிவுகளையும் அதனை எப்படி நாம் எதிர்கொள்வது, நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதையும், பேரிடர் நிகழ்வுகளில் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான நவீன தொழில் நுட்பங்களை வைத்து அதனை செயல்படுத்துவதை பற்றியும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக காண்பிக்கப்பட்டது.

இறுதியாக பள்ளி தாளாளரும், முதல்வருமான அஹமது பாஷா அவர்கள் பேசும் போது:-
மாணவர்களுக்கு கல்வி மட்டும் படம் அல்ல இன்னும் பல விசயங்களை நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டும். இது போன்று பொதுவான விசயங்களை நாம் கற்றுக்கொண்டால் நமக்கு பயன்படும் என்பதை தெரிவித்தார்.

இந்த விளக்கப் பயிற்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பயன்பெற்றார்கள்.


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top