vkrnajur vkrnajur Author
Title: மோடிக்கு மாயாவதி பகிரங்க சவால்! அது என்ன தெரியுமா?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு இதுவரை 90 சதவிகித பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பது அனைத்தும் பொய்யான தக...
கறுப்புப்பண ஒழிப்பு நடவடிக்கைக்கு இதுவரை 90 சதவிகித பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவிப்பது அனைத்தும் பொய்யான தகவல் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். உண்மையான கருத்து கணிப்பு வேண்டுமென்றால் தேர்தலை சந்திக்கும்படி அவர் சவால் விடுத்துள்ளார்.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பிற்கு 'நரேந்திர மோடி' ஆப் மூலம் கருத்துக்கூற பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியே தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த அழைப்பை விடுத்திருந்தார். 

செல்லாத நோட்டு விவகாரம் குறித்து, இதுவரை 5 லட்சம் பேர் கருத்து சொல்லி உள்ளதாக ட்விட்டரில் மோடி தெரிவித்திருந்தார். மேலும் நாட்டின் 2,000 பகுதிகளிலிருந்து 5 லட்சம் பேர் கருத்து கூறியுள்ளதாகவும், அதில் 90 சதவீதம் பேர் அரசுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் மோடி மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி, பிரதமர் மோடி கூறியிருப்பது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து பிரதமர் விவாதிக்க தயாரா என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

மக்கள் ஆதரவு அளிப்பது என்பது மோடியின் கட்டுக்கதை என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார். மேலும் உண்மையான கருத்துகணிப்பை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு மோடி தேர்தலை சந்திக்க வேண்டும் என்றும் மாயாவதி சவால் விடுத்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top