"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/11/16

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான படிவத்தில் சாதி விவரத்தை கேட்பது ஏனென்று இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர்.நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் சனிக்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆர். நல்லக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7       
 
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகவும், கள்ள நோட்டுக்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிரதமர் கூறுகிறார். இது ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால் புதிய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டு வராது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.

மேலும், வங்கிகளுக்கு பணம் எடுக்கச் சென்றால் அதற்காக கொடுக்கப்படும் விண்ணப்பங்களில் தாழ்த்தப்பட்டவரா, பிற்படுத்தப்பட்டவரா, மிகவும் பிற்படுத்தப்பட்டவரா என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பணம் எடுப்பதற்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. இதனை ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு நல்லகண்ணு கூறினார்.

இந்தக் கூட்டத்தின் போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், ”ஜனநாயக நாட்டில் பொதுமக்கள் வாக்களித்து எம்பி, எம்எல்ஏக்கள் தேர்வு செய்கின்றனர். அதிக இடங்களில் வெற்றி பெறுகிற கட்சியைச் சார்ந்த எம்பிக்கள் பிரதமரை தேர்வு செய்கின்றனர். அப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதி, மக்களுக்கு துன்பம் விளைவிக்கிற வகையில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சர்வாதிகார செயல். இந்திய மக்கள் ஒரு போதும் சர்வாதிகாரத்தை ஏற்க மாட்டார்கள்” என்றார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.