காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: சனி, ஞாயிறு வங்கிகளுக்கு விடுமுறை இல்லை!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வகையில் வங்கிகள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல செயல்ப...
பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வகையில் வங்கிகள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தபட
உள்ளதாகவும் பிரதமர் அறிவித்திருந்தார்.

இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக டிசம்பர் 30
வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும்
அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இன்று (நவம்பர் 9) வங்கிகள் செயல்படாது என்றும், நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும்
அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில், பொதுமக்கள் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இரண்டாவது சனிக்கிழமையானாலும் பொதுமக்கள் வசதிக்காக வங்கிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top