"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/11/16

காதல் என்ற பெயரில் மார்க்கத்தை விட்டு வெளியேறும பெண்களுக்காக ஒரு சில அற்ப காரணங்களுக்காக புனித மார்க்கமான இஸ்லாத்தை விட்டு வெளியேறும் பெண்களே...

கேவலம் சில நிமிடங்கள் சுகத்திற்க்காக "அல்லாஹ்வை மறுத்த காபிர்களுடன் மட்டும் தான் வாழ்வேன் என்று மார்க்கத்தையும் ,தீனையும் தூக்கி போட்டு செல்லும் பெண்களே...

நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய உம்மு சுலைம் (ரலி ) அவர்களின் வாழ்கையில் நடந்த ஒரு சம்பவம் ; நபி (ஸல் ) அவர்களுக்கு பல வருடங்கள் பனி புரிந்த சஹாபி அனஸ் (ரலி )அவர்களின் தாயார் உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் ;அனஸ் (ரலி ) அவர்கள் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் விதைவையாக இருந்தார்கள் .அப்பொழுது அபு தல்ஹா என்ற சகோதரர் உம்மு சுலைம் (ரலி ) அவர்களிடம் வந்து உங்கள் நிலைமயை நான் கேள்வி பட்டேன் உங்களை நான் திருமணம் செய்ய ஆசை படுகிறேன் என்று தன் விருப்பத்தை கூறுகிறார்கள் .. அபு தல்ஹா பெரிய வசதியானவராகவும்,அறிவுள்ளவராகவும், அழகுடயாரகவும் இருந்தவர் ..

அதற்கு உம்மு சுலைம் (ரலி ) அவர்கள் ; நீங்கள் வசதியானவராக , அழகானவராக , அறிவுள்ளவராக இருக்கலாம் .. ஆனால்

அபு தல்ஹா அவர்களே உங்களிடத்தில் தீன் இல்லை.. நீங்கள் ஒரு காபிர் .. நான் ஒரு முஸ்லிம் .. நீங்கள் எரிந்து விடக்கூடிய மரத்தையும் , உடைந்து சிதறக்கூடிய கல்லையும் வணங்குகிரீர்கள் ! ஆனால் நான் அவற்றை எல்லாம் படைத்த அல்லாஹ்வை வணங்கி கொண்டிருக்கிறேன் .. நீங்கள் எரிந்து சாம்பலாகும் நெருப்பை வணங்குகிரீர்கள் !

ஆனால் அதை படைக்கவும் அணைக்கவும் தெரிந்த அல்லாஹ்வை வணங்கி கொண்டிருக்கிறேன் !இன்னும் யார் நாடினால் எதுவம் நடக்குமோ ,அவன் நாடாவிட்டால் எதுவும் நடக்காதோ அவனை வணங்கி கொண்டிருக்கிறேன் ! நீங்கள் என்னை திருமணம் செய்ய நினைத்தால் அதற்க்கு மகராக அல்லாஹ்வின் மார்க்கத்தை நீங்கள் ஏற்று கொண்டால் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என பதில் அளித்தார்கள் !

இவர்கள் அல்லவா இஸ்லாமிய பெண்மணி!

அழகும் , செல்வமும் கொண்ட ஒருவர் அதுவும் இவர்கள் விதவையாக இருக்கும் பொழுது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் தான் திருமணம் செய்து கொள்வேன் என இஸ்லாத்தை ஏற்க வைத்து தீனில் உறுதியுடன் நின்ற சமுதாயத்தில் பிறந்த நாம் நம் தீனில் உறுதியுடன் நிற்கிறோமா? இல்லை அற்ப

காரணங்களுக்காக காற்றில் பறக்க விடுகிறோமா ?

அல்லாஹ் நம் அனைவரையும் நம் வாழ் நாள் முழுவதும் தீனுடன் வாழ கிருபை செய்வானாக !

இஸ்லாத்திற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருங்கள் ! ஆனால் ஒரு போதும் எதற்காகவும் ,, உங்கள் உயிர் போகும் நிலைமை வந்தாலும் கூட இஸ்லாத்தை மட்டும் இழந்து விடாதிர்கள்....!

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.