5/11/16

வி.களத்தூர், மில்லத்நகரில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் கடந்த 15 தினங்களாக, தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். காரணம் கடந்த இரண்டு வாரங்களாக மில்லத்நகர் பகுதியில் பஞ்சாயத்தாரால் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.

தெருவில் உள்ள குழாய்களில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இரண்டொரு நாள் குடிநீர் வராமல் போனால் சமாளித்து விடலாம். ஆனால் இரண்டு வாரங்களாக குடிநீர் வராமல் இருந்தால் அதை எப்படி சமாளிக்க முடியும்?

எனவே இப்பகுதி மக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக சில கிலோ மீட்டர் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் சிரமத்திற்கு ஆளாயினர்.

நமதூர் அருகில் உள்ள வண்ணாரம்பூண்டி, அகரம், திருவாளந்துறை ஆகிய ஊர்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வந்தும், சிலர் தண்ணீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அன்றாட வேலைகளை ஒதுக்கிவிட்டு தண்ணீர் கொண்டு வந்து சேர்ப்பதே மிகவும் முக்கியமான வேலையாக மாறிவிட்டது. 

இதுகுறித்து வி.களத்தூர் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குவதற்கான எந்த வித ஏற்பாட்டையும் செய்யவில்லை. உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் கடந்த அக்டோபர் 24 ஆம் தேதியோடு முடிந்துவிட்ட நிலையிலும், அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டதாலும் – தற்போது உள்ளாட்சி அமைப்பான ஊராட்சி நிர்வாகத்திற்கு யார் பொறுப்பு என்று புரியாமல், புகாரை யாரிடம் அளிக்க வேண்டும் என்ற விடையும் தெரியாமல் மில்லத் நகர் பகுதி மக்கள் குழப்பத்தில் உள்ளார்கள். 

மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் தேவையை விரைந்து வழங்க ஊராட்சி அல்லது அது சம்பந்தப்படட பொறுப்பை இப்போது யார் கவனிக்கிறார்களோ அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தாகமான கோரிக்கை மில்லத் நகர் பகுதி மக்களிடையே எழுந்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும் என்ற விடை தெரியாத கேள்வியை போல, வி.களத்தூர் – மில்லத் நகர் பகுதி மக்கிளின் குடிநீர் குறையைத் தீர்க்கும் நடவடிக்கையும் எப்போது என்று விடை தெரியாத கேள்வியாக மாறிவிடாமல் இருந்தால் போதும்!!!
Next
புதிய இடுகை
Previous
பழைய இடுகைகள்

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.