"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
22/11/16

சவுதி அரசின் மாற்றுப் பொருளாதாரத் தேடல் நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து வகை விசா கட்டணங்களை தாறுமாறாக ஏற்றியிருந்தது. இந்த விசா கட்டண உயர்வை பல்வேறு நாடுகளும் குறைகாணத் துவங்கியதாலும், வியாபார முதலீட்டாளர்கள் பலர் யோசிக்கத் துவங்கியதாலும் சற்றே தனது பிடிவாத நிலையிலிருந்து இறங்கி வந்துள்ளது.

விசா கட்டணம் ஏற்றப்பட்டபோதே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டது. தற்போது இருசாராரும் நன்மையடையும் வகையில் சவுதியுடன் நியாயமாக நடந்து கொள்ளும் சில நாடுகளுடன் ஒப்பந்த அடிப்படையில் விசா கட்டணங்களை குறைக்க பரிசீலிக்கப்படும் என வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான அமைச்சர் மாஜித் அல் கஸாபி அவர்கள் ரியாத்தில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்தார்.

அதேவேளை இரண்டாம் முறை ஹஜ், உம்ரா யாத்திரை மேற்கொள்வோருக்கான விசா கட்டண ஏற்றங்கள் தளர்த்தப்பட்டதாக வெளியான செய்தியை சவுதி அரசு வதந்தி என மறுத்துள்ளது.

இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நாடுகளில் சவுதி அரேபியா முதலிடத்தில் இருப்பதால், இந்தியர்களை பாதிக்கும் இந்த விசா விலையேற்றத்தை அமைச்சர் அறிவித்துள்ளபடி பரஸ்பர ஒப்பந்தம் மூலம் குறைத்திட இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், செய்யுமா?

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் சுஷ்மா சுவராஜ் நலம் பெற்று வந்தவுடன் இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும், சுஷ்மா அவர்களுடன் டிவிட்டர் தொடர்பில் உள்ளவர்கள் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் விரும்புகின்றோம்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.