"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
24/11/16

கர்நாடக மருத்துவமனையில் பழைய ரூபாய் நோட்டுகளை ஏற்க மறுத்ததால், மத்திய அமைச்சரின் சகோதரர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

மத்திய புள்ளியியல் துறை அமைச்சரான சதானந்த கவுடாவின் இளைய சகோதரரான பாஸ்கர், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மங்களூரு தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனை நிர்வாகம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்ததால், சாதனந்த கவுடாவின் சகோதரர் உயிரிழந்ததாக கர்நாடக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மருத்துவமனைக்கு அளிக்க வேண்டிய தொகையை காசோலை மூலம் அளித்து தனது சகோதரரின் உடலை அமைச்சர் சதானந்த கவுடா பெற்றுச் சென்றார்.


கருப்புப்பண ஒழிப்பு மற்றும் கள்ளநோட்டுகள் புழக்கத்தைத் தடுப்பதற்காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.