"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
28/11/16

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ந்தேதி நடந்தது. அதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் எதிர்பாராத வகையில் வெற்றி பெற்றார். இவர் ஹிலாரி கிளிண்டனை விட மக்கள் வாக்கு எனப்படும் பாப்புலர் ஓட்டுகளை குறைவாக பெற்றுள்ளார்.

அமெரிக்க முறைப்படி அதிபரின் வெற்றியை தேர்வாளர் வாக்குகள் தான் நிர்ணயிக்கும். அந்த வகையில் ஹிலாரியை விட டிரம்ப் கூடுதல் தேர்வாளர்களை பெற்று வெற்றி பெற்றார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7       

இதற்கிடையே விஸ் கான்சின், மிக்சிகான் மற்றும் பென்சில்வேனியா மாகாணங்களில் ஹிலாரி வெற்றி பெறுவார் என எதிர் பார்க்கப்பட்டது. மாறாக அங்கு டிரம்ப் வென்றார்.

எனவே அங்கு முறைகேடு நடந்ததாக கூறி தேர்தலில் போட்டியிட்ட கிரீன் கட்சி வேட்பாளர் ஜில் ஸ்பெயின் விஸ்கான்சின் மாகாணத்தில் மறுஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் மனு செய்துள்ளார்.

அதே போன்று மிக்சிகான், பென்சில்வேனியாவிலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளார். இதற்கிடையே கிரீன் கட்சி வேட்பாளரின் கோரிக்கையை ஹிலாரி கிளிண்டன் தரப்பும் ஆதரித்துள்ளது. அது குறித்து ஹிலாரியின் பிரசார குழுவை சேர்ந்த மார்க் இலைஸ் கூறும்போது, ‘‘தேர்தல் முடிவை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார்.

அதற்கு டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிரீன் கட்சி வேட்பாளர் மறுவாக்கு எண்ணிக்கைக்கு மனு செய்தது தேவையற்றது. இது ஒருவகை மோசடியாகும்.

தேர்தல் முடிவு மக்களால் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்து விட்ட நிலையில் இத்தகைய கோரிக்கை தேவையற்றது என கூறியுள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.