காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வி.களத்தூர் பொதுமக்கள் கடும் அவதி!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று அறிவிக்கப்பட்டதால். வி.களத்தூரில் உள்ள டீ கடை, மளிகை கடைகள், ஜவுளி கடைகள் மெடி...
1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென்று அறிவிக்கப்பட்டதால்.

வி.களத்தூரில் உள்ள டீ கடை, மளிகை கடைகள், ஜவுளி கடைகள் மெடிக்கல் சாப், திருமண மண்டபம், ஒட்டல்கள், பேருந்தில் என அனைத்திலும்  பணம் வாங்க மறுத்தனர்.

நோட்டுகளை உடனடியாக மாற்றுவதற்கோ, பொருட்கள் வாங்குவதற்கோ முடியாமல் சிரமப்பட்டனர்.

இதனால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளானார்கள். மக்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நமதூர் பொதுமக்கள் பலரும் மாத சம்பளத்தை ஏ.டி.எம்.களில் ஒரு சில நாட்கள் முன்னர் தான் எடுத்துள்ளனர்.

நள்ளிரவு 12 மணி முதல் செல்லாது என்று அறிவித்தாலும் அறிவிப்பு வெளியானது முதலே பெரும்பாலான கடைகளில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர்.

இதுகுறித்து நமதூர் பொதுமக்கள் கூறியதாவது:–

பிரதமரின் இந்த அறிவிப்பு எங்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சரியான கால அவகாசம் கொடுக்காமல் இந்த திட்டத்தை அமல்படுத்தியது தவறு.

இதனால் நாங்கள் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டு இருக்கிறது.

மேலும் நாளை ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டையை கொண்டு சென்றால் தான் வங்கிகளில் பணத்தை மாற்ற முடியும் என்று சொல்கிறார்கள்.

எனவே நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப்போய் இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைப்பற்றி நமதூர் வியாபாரிகளிம் கேட்டபோது :-

ஒரிரு நாட்களுக்கு வியாபாரம் பந்த நிலையில் தான்  இருக்கும் என வருத்தம் தெரிவித்தன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top