Mohammed Farook Mohammed Farook Author
Title: ATM மையங்களில் நாளை முதல் ₹50 நோட்டு!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
நாளை முதல் (நவம்பர் 11) இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரத்திலும் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ள...
நாளை முதல் (நவம்பர் 11) இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம் இயந்திரத்திலும் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. நவம்பர் 11 முதல் ஏ.டி.எம்.களில் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

கடந்த 8ந்தேதி இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டார். இதனால் நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும்
நடுத்தர வர்க்கத்தினர் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

மேலும், 50 ரூபாய், 100 ரூபாய் நோட்டுகளுக்கு திடீரென பெரும்
தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் அன்றாட வாழ்க்கை நடத்தவே மக்கள்
பெரிதும் கஷ்டப்பட்டனர். நேற்றும், இன்றும் ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலக மையங்களில் புதிய 2000
ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு, பழைய நோட்டுகளுக்கு பதிலாக வழங்கப்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் வங்கிகளுக்கு சென்றே புதிய
நோட்டுகளை வாங்கி வருகிறார்கள். இதன் காரணமாக வங்கிகள் மற்றும் அஞ்சல் மையங்கள் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகின்றது.

இரண்டு நாளுக்கு பிறகு, நாளைதான் நாடு முழுவதும் உள்ள ஏ.டி.எம் மையங்கள்
செயல்பாட்டுக்கு வருகின்றன.
இந்நிலையில் நாளை முதல் ஏ.டி.எம் மையங்களில்
இருந்து 100, 50 ரூபாய் நோட்டுகளை மக்கள் எடுத்துக்
கொள்ளலாம் என ரிசர்வ் வங்கி
அறிவித்துள்ளது
இதுவரை அனைத்து ஏ.டி.எம்-களில் குறைந்த
தொகையாக ரூ.100 மட்டுமே எடுக்கலாம்
என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top