"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/11/16

அம்பேத்கரின் 60-வது நினைவு தினத்தை முன்னிட்டு விசிக சார்பிலான அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு புதுவையில் டிசம்பர் 6-ம் தேதி நடக்கவுள்ளது என்று அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மத்தியில் ஆளும் பாஜக அரசு கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாகச் சொல்லிக்கொண்டு ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் ‘பொருளாதார அவசர நிலையை’ நடை முறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. உழைத்து சம்பாதித்த பணத்தை எடுப்பதற்கே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். இத்தகைய கொடுமை ராணுவ சர்வாதிகார ஆட்சிகளில்கூட நடந்ததில்லை.

இந்நிலையில், அம்பேத்கரின் 60-வது நினைவு ஆண்டினை முன்னிட்டு, விசிக சார்பில், ‘அரசியலமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாடு’ புதுச்சேரியில் வரும் டிசம்பர் 6-ம் தேதி நடத்தப்படவுள்ளது'' என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்


பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... -Muslim Express News 24x7  

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.