"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
29/11/16

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்ற ஆகிய மூன்று தொகுதிகளிலும் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். இந்நிலையில் இவர்கள் மூன்று பேரும் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
வெற்றி பெற்ற மூன்று பேரும் எம்எல்ஏக்களாக சபாநாயகர் அறையில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக் கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மேலும், பதவி ஏற்பு நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய EXPRESS NEWS (Like page) பக்கத்தை LIKED செய்து இணைந்திருங்கள்... - Muslim Express News 24x7      
 
இந்த பதவியேற்புக்கு பின்னர் அவர்கள் அப்போலோவில் கடந்த 65 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவிடம் ஆசி பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இதுவரை வெளியாகாத நிலையில், வெற்றி பெற்ற மூன்று பேரும் முதல்வரை சந்திக்க உள்ள நிலையில் அந்த புகைப்படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.