"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
14/11/16

போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்தது. நாட்டில் முதல்முறையாக போபால் மக்கள் ஏ.டி.எம்.,கள் வழியாக புதிய 500 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர்.

பழைய நோட்டுகள் செல்லாது
கறுப்பு பணத்தை வெளிகொணரவும் முறைகேடான பண பதுக்கலை தடுக்கவும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8 ம் தேதி அதிரடியாக அறிவித்தார். பழைய நோட்டுகளை டிச.,30ம் தேதிக்குள் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையை காண்பித்து மாற்றி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோட்டுகள் அறிமுகம்
இந்திய ரிசர்வ் வங்கி கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதையடுத்து, புதிய 2000 ரூபாய் நோட்டு நாடு முழுவதும் புழக்கத்திற்கு வந்தது. இருப்பினும், மக்கள் அதிகம் பயன்படுத்தும் 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வராமல் இருந்தது. இந்நிலையில், நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட 50 லட்சம் எண்ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் முதற்கட்டமாக போபால், டில்லி, மும்பை ஆகிய நகரங்களுக்கு அனுப்பப்பட்டது.

போபால் மக்கள் மகிழ்ச்சி
போபாலில் உள்ள குறிப்பிட்ட எஸ்.பி.ஐ., வங்கி ஏ.டி.எம்.,களில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டன. அதற்கேற்ப அந்த ஏ.டி.எம்., எந்திரங்களில் மாற்றம் செய்யப்பட்டது. நாட்டில் முதல்முறையாக ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய 500 ரூபாய் நோட்டுகள் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புழக்கத்திற்கு வந்தது. இதனால், அப்பகுதி மகிழ்ச்சி அடைந்தனர்.

பிற நகரங்களுக்கு…
போபாலை தொடர்ந்து டில்லி, மும்பை நகரங்களிலும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தகட்டமாக 50 லட்சம் எண்ணிக்கையிலான புதிய 500 ரூபாய் நோட்டுகள் புதன்கிழமை அனுப்பப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நாட்டின் அனைத்து நகரங்களுக்கும் படிப்படியாக புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.