"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
27/11/16

கடந்த 8ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் செல்லாது என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவும், நேபாளமும் தனித்தனியான நாடுகளாக இருந்தாலும் இந்திய ரூபாய் நோட்டுக்களை நேபாள மக்களும் பயன்படுத்துகின்றனர், இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த நேபாள அரசும் இதுவரை தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் அறிமுகமும் நேபாளத்திலும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியது. இதனால் செய்வதறியாது தவித்தது நேபாள அரசு. 

மக்களிடையே ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை போக்க, நேபாள அரசு, ரூபாய் நோட்டுகள் குறித்து இந்திய அரசின் அறிவிப்பு நேபாளத்திற்கு பொருந்தாது என்று அறிவித்துள்ளது. 

மேலும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மக்கள் பயன்படுத்தாலாம் என்றும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவித்துள்ளது. 

இது குறித்து நேபாள ராஷ்ட்ர வங்கியின் உயர் அதிகாரி ராமு மவுடல் கூறும்போது, இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் இப்போது உள்ள ஒப்பந்தத்தின் படி நேபாள மக்கள் இந்திய ரூபாயில் 25000 ரூபாய் வரை வைத்துக்கொள்ளலாம் என்பதே சட்டம். அதில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளும் அடங்கும். 

மேலும் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை எந்த தகவலும் அளிக்கவில்லை எனவும், இது குறித்து புதிய ஒப்பந்தத்தை இந்தியாவும் நேபாளமும் மேற்கொண்ட பின்னரே புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை நேபாளத்தில் மக்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.