"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
17/11/16

காலாவதியான 500, 1,000 ரூபாய் நோட்டுகளை 2017, மார்ச் 31-க்கு பிறகு வைத்திருப்பது சட்டவிரோத மாக கருதப்படும். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கறுப்புப் பணம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்ஹி, ‘‘பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம். இந்த கெடுவை தவறவிட்டவர்கள் 2017, மார்ச் 31-க்குள் உரிய விளக்கம் அளித்து மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகும் பணத்தை மாற்றாமல் வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கான சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.அப்போது குறுக்கிட்ட நீதி பதிகள் ‘ஏடிஎம்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் புதிய ரூபாய் நோட்டுகள் விரைவாக கிடைக்கும் வகையில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறதா?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு அட்டர்னி ஜெனரல் பாதுகாப்பு காரணத்தால் இந்தத் தகவலை வெளியிட முடியாது என மறுத்துவிட்டார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.