காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: பழைய 500, 1000 ரூபாய் அவகாசம் நவ.24 வரை நீட்டிப்பு
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
பெட்ரோல்‌ ப‌ங்க்குகள், சுங்க‌ச்சா‌வடிக‌ள், ரயில் ‌‌நிலையங்‌களில் பழைய ‌‌5‌00 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டு‌களை நவம்பர் 24ம் தேதி ...
பெட்ரோல்‌ ப‌ங்க்குகள், சுங்க‌ச்சா‌வடிக‌ள், ரயில் ‌‌நிலையங்‌களில் பழைய ‌‌5‌00 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டு‌களை நவம்பர் 24ம் தேதி வரை செலுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் ரூபாய் நோட்டு தட்டுப்பாடு பிரச்னை குறித்து மத்திய ‌அமைச்சர்கள்‌ மற்றும் முக்கிய அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொருளாதார விவகார‌த் துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

குறிப்பிட்ட இடங்களில் பழைய ‌‌ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்வதற்‌‌கான அறிவிப்பு இன்று இரவுடன் காலாவதியாக‌ இருந்‌த நிலையில் அது மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார கட்டணம், உள்ளாட்சி அமைப்புகளுக்கான வரிகள் உள்ளிட்டவற்றை பழைய 500, 1000 ரூபாய் ஆக செலுத்தவும் 10 நாட்கள் கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கி தொடர்பாளர்களின் பணக் கையிருப்பு வரம்பு 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிராமப்புற மக்களுக்கு பணம் கிடைப்பது எளிதாகும் என்றும் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். நடப்புக் கணக்கு வைத்திருக்கும் நிறுவனங்கள் ஒரே நேரத்தில் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுக்கவும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top