Mohamed Farook Mohamed Farook Author
Title: ஜெயலலிதா@42... கருணாநிதி@23! வீடே மருத்துவமனை.. மருத்துவமனையான வீடு
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
அறிவாலயம் இருக்குமிடம் நோக்கி அன்றுதான் தொண்டர்கள் (டிசம்பர்- 27, 2014) அதிகமாகக் குவிந்தனர். "கருணாநிதி சீரியஸ்" என எங்கிருந...
அறிவாலயம் இருக்குமிடம் நோக்கி அன்றுதான் தொண்டர்கள் (டிசம்பர்- 27, 2014) அதிகமாகக் குவிந்தனர். "கருணாநிதி சீரியஸ்" என எங்கிருந்தோ புறப்பட்ட வதந்தி கழக உடன்பிறப்புகளை மொத்தமாக அறிவாலயம் நோக்கிச் செல்ல வைத்தது.

இடுப்பு வலி காரணமாக சென்னை அப்போலோவில் அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. ஆனால், வெளியிலோ, இடுப்பு வலியை இதயவலி என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

"உளவுப் பிரிவு போலீசார் தான் இப்படி வேண்டுமென்றே புரளியைப் பரப்பி வருகின்றனர். இது விஷமத்தனமானது, தேவையற்றது. கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் " என்று அன்றைய தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி, போலீசார் மீது குற்றம்சாட்டினார்.

தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும், "இன்னும் இரண்டு நாட்களுக்கு கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்" என்று மீடியாக்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், "சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட வேண்டும்" என்று கடந்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை" என்று இதற்கு பதிலடி கொடுத்தார்.

அக்டோபரில் கருணாநிதி உடல்நிலை!

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை மூலம் கருணாநிதி, விசாரித்துக் கொண்டிருந்த வேளையில்தான், "கருணாநிதிக்கும் உடம்பு சரியில்லையாமே?" என்ற கேள்வியுடன் அங்கொன்றும், இங்கொன்றுமாக அக்டோபர் 10-ம் தேதிவாக்கில் ஆரம்பித்தது சலசலப்பு.

'கருணாநிதி உடல்நிலை' குறித்த விவகாரத்துக்கு அக்டோபர் -24- ம் தேதி, அதாவது 13- நாள் கழித்து முற்றுப்புள்ளி வைத்தது தி.மு.க. தலைமை.
"திடீர் ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை யாரும் சந்தித்து தொந்தரவு செய்ய வேண்டாம்" என தி.மு.க. தலைமை அறிக்கை வெளியிட்டது.

பல சந்தர்ப்பங்களில் உடல்நலக் குறைவால் கருணாநிதி சிகிச்சை பெற்றவர்தான். ஆனால் அது எப்போதும் ஒரு வாரம் கடந்ததில்லை. முதல்முறையாக கருணாநிதி ஒரு மாத காலம் தொண்டர்களைச் சந்திக்காமலும், அறிவாலயத்துக்கு வராமலும் ஓய்வில் இருப்பது இதுதான் முதல்முறை.

கோபாலபுரம் வீட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் கருணாநிதியின் மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து, பல கட்சிகளின் தலைவர்கள் (அ.தி.மு.க. தவிர்த்து) ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.
கட்சி அலுவலகமான அறிவாலயம் செல்லவில்லை. இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த நேர் காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மூன்று தொகுதி வேட்பாளர்களும், கருணாநிதியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை.

காவிரி பிரச்னை தொடர்பாக, அறிவாலயத்தில் நடந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் என எதிலும், கருணாநிதி பங்கேற்கவில்லை. 'உள்கட்சி பாலிடிக்ஸ் ஓடுகிறது, தலைவர் கோபமாக இருக்கிறார்' என்று இதற்கான பதிலையும் சிலர் தயாரித்து 'வதந்தி' யாக ஓடவிட்டனர்.

"கருணாநிதிக்கு, தொடர்ந்து சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால், அதற்காக அவர் சிகிச்சை பெற்றார். அப்போது உட்கொண்ட மருந்தினால், ஏற்பட்ட, 'அலர்ஜி' காரணமாக, கை, கால்களில் கொப்பளங்கள் உருவாகியுள்ளன. குடும்ப டாக்டர் கோபால் தலைமையில், அவரது உடல் நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் பிரபல மருத்துவமனை டாக்டர்கள், கோபாலபுரம் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டு, கொப்பளங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்று அறிவாலயம் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின.
தி.மு.க தலைவர் கருணாநிதி இப்போதுள்ள சூழ்நிலையில் கோபாலபுரம் வீடு, ஏறக்குறைய மருத்துவமனையாகவே ஆகி விட்டிருக்கிறது... அப்போலோ மருத்துவமனையோ தினந்தோறும் சூழும் அ.தி.மு.க. தொண்டர்களால் போயஸ் கார்டனாகி விட்டிருக்கிறது.

thanks - Vikatan

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top