"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
16/11/16

டெல்லி அதிகாரங்களை மத்திய அரசு கட்டுப்படுத்தி கெஜ்ரிவாலை பாடாய் படுத்தி வந்தாலும் தொடர்ந்து மோடிக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவால், பணம் தொடர்பாக மத்திய அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

நாடெங்கும் மக்களுக்கு எழுந்துள்ள சூழல் தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை இன்று கூட்டவிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “கறுப்புப் பணத்தை ஒழிக்க கொடுக்கப்பட்டுள்ள கசப்பு மருந்து இது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். ஆனால், அவர் ஏழைகளுக்கு விஷத்தைத்தான் கொடுத்துள்ளார்.

ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு என்னையும் மிகவும் பாதித்து இருக்கிறது” என்று முதலமைச்சர் கெஜ்ரிவால் கூறினார். அப்போது ஒரு நிருபர், ‘உங்களிடம் தற்போது எவ்வளவு ரூபாய் உள்ளது?’ என்று கேட்டார். அதற்கு கெஜ்ரிவால், ‘‘என்னிடம் ரூபாய் 250 தான் உள்ளது. வேறு சில்லறை நோட்டுகள் கிடைக்கவில்லை’’ என்றார். அதோடு தனது பையில் இருந்து ரூபாய் 250ஐ எடுத்து நிருபர்களிடம் காட்டினார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.