Mohammed Farook Mohammed Farook Author
Title: விமான நிலையங்களில் 21-ம் தேதி வரை பார்க்கிங் கட்டணம் ரத்து.
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 21-ம் தேதி(நவ.,21) வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.நீட்டிப்பு இதுகுறித்த...
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வரும் 21-ம் தேதி(நவ.,21) வரை பார்க்கிங் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.நீட்டிப்பு இதுகுறித்து விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெய்ந்த் சின்கா டுவிட்டரில் தெரிவித்ததாவது: 

அனைத்து விமான நிலையங்களிலும் நவ.,18ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருந்தது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று இது மேலும் நீடிக்கப்படுகிறது. 

அனைத்து விமான நிலையங்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது வரும் 21ம் தேதி வரை(நவ.,21) நிறுத்தி வைக்கப்படும். இவ்வாறு தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மோடி அதிரடிஊழல்,கறுப்பு பணத்தை ஒழிக்கவும் பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுக்கவும் 500, 1000 ரூபாய் வாபஸ் பெறப்படும் என கடந்த 8-ம் தேதி பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். 

இதையடுத்து புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகள் புழகத்தில் விடப்பட்டுள்ளன. கையில் வைத்துள்ள பழைய நோட்டுகளை டிச.30-க்குள் வங்கியில் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் பழைய நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை பெற வங்கி மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் குவிந்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top