Mohammed Farook Mohammed Farook Author
Title: நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11- ம் தேதி வரையில் கட்டணம் கிடையாது
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
புதுடெல்லி, நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ...
புதுடெல்லி,
நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் 11-ம் தேதி நள்ளிரவு வரையில் கட்டணம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலை 11 தேதி நள்ளிரவு வரையில் வசூலிப்பதை ரத்து செய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது என்று மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்காரி அறிவித்து உள்ளார்.

வாகன போக்குவரத்து தடையின்றி நடக்க ஏதுவாக தற்காலிகமாக சுங்கக்கட்டணம் ரத்து செய்ய்யப்பட்டுள்ளதாக டுவிட்டரில்
தெரிவித்து உள்ளார் நிதின் கட்காரி.

இன்று முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்தார். புதியதாக புதுவடிவத்துடன் ரூ. 2,000
மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

இருப்பினும், 72 மணி நேரத்துக்கு, அதாவது, 11-ந் தேதி நள்ளிரவு வரையில் சில இடங்களில் இந்நோட்டுகளை பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்டது.

* மருத்துவமனைகள்
* மருந்து கடைகள்
* பெட்ரோல் விற்பனை நிலையங்கள்
* ரெயில் நிலைய முன்பதிவு கவுண்ட்டர்கள்
* பஸ் நிலையங்கள்
* விமான நிலையங்கள்
* உடல் எரியூட்டும் இடம்
* கூட்டுறவு சங்கங்கள்
* மாநில அரசு நடத்தும் பால் நிலையங்கள் ஆகிய இடங்களில் ரூ. 500, 1000 நோட்டுகள் ஏற்றுக்
கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மத்திய அரசு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று அறிவித்ததை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிப்பதில் குளறுபடி ஏற்பட்டது. மேலும் வாக்குவதாங்களும் நேரிட்டது. இந்நிலையில் மத்திய
அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top