Salman Rasool Salman Rasool Author
Title: *kabadi 2016* ஈரானை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாதனை**
Author: Salman Rasool
Rating 5 of 5 Des:
*kabadi 2016* ஈரானை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாதனை**      அகமதாபாத்: உலககோப்பை கபடி இறுதிப் போட்டியில் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில்...

*kabadi 2016* ஈரானை வீழ்த்தி இந்தியா மீண்டும் சாதனை** 

   அகமதாபாத்: உலககோப்பை கபடி இறுதிப் போட்டியில் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 3வது உலககோப்பை ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், அர்ஜென்டினா, போலாந்து, கென்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய 12 அணிகள் பங்கேற்றன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டில் இந்தியா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் இந்திய வீரர்கள் போராடினர். இருப்பினும் ஈரான் அணி இந்தியாவை விட முன்னிலை வகித்தே வந்தது.
முதல் பாதியில் ஈரான் அணி 18- 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள், ரைடு சென்று புள்ளிகள் எடுப்பதிலும், எதிரணி வீரர்களை மடக்கி பிடிப்பதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஈரான் வீரர்கள் திணறினர். ஆட்ட நேர முடிவில்  இந்திய அணி 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலககோப்பை கபடி போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top