Mohammed Farook Mohammed Farook Author
Title: கேரளாவில் I.S இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது !
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கேரளாவில் உள்ள கண்ணூர் அருகே ஐ. எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். கேரள மா...
கேரளாவில் உள்ள கண்ணூர் அருகே ஐ. எஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 5 பேரை இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் காசர்கோடு பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 6 பெண்கள் உள்பட 21 பேர் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென மாயமானார்கள். இது தொடர்பாக இந்திய புலனாய்வு பிரிவினர் நடத்திய விசாரணையில் இவர்கள் அனைவரும் துபாய் ஆப்கானிஸ்தான் வழியாக சிரியா சென்று ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்துகொண்டது தெரியவந்தது.

இந்திய தேசிய புலனாய்வு அமைப்பினர் நடத்திய விசாரணையில் இந்த 21 பேரும் ஐஎஸ் இயக்கத்தில் சேர்ந்தது உறுதிசெய்யப்பட்டது. இவர்களுக்கு உடந்தையாக இருந்த மும்பையை சேர்ந்த 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் கண்ணூர் மாவட்டம் பானூர் அருகே உள்ள பெரிங்கத்தூர் கனகமலை வனப்பகுதியில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து நேற்று பகல் 1 மணியளவில் அதிகாரிகள் இந்த வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஐஎஸ் ஆதரவாளர்கள் 5 பேர் பிடிபட்டனர். அவர்கள் உடனடியாக விசாரணைக்காக கோழிக்கோட்டுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top