"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
20/10/16

துபாயில் நோல் கார்டுகள் (NOL Cards) என அழைக்கப்படும் பொது வாகன போக்குவரத்துக்கான அனுமதி சீட்டுக்களை பன்முக பயன்பாட்டிற்கும் விரிவுபடுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது மெட்ரோ நிலையங்களிலும் பெட்ரோல் பங்குகளிலும் செயல்படும் ஜூம் (ZOOM) எனும் சில்லறை விற்பனை கடைகளில் அதிகப்பட்சம் 5000 திர்ஹம் வரை பொருட்களை வாங்க பயன்படுத்தலாம். இந்த வசதியை இந்த வருட இறுதிக்குள் 1000 சில்லறை வர்த்தக கடைகளுக்கும், அடுத்த ஆண்டிற்குள் 10,000 சில்லறை வர்த்தக கடைகளுக்கும் விரிவுபடுத்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி மற்றும் தங்க நிற நோல் கார்டுகளில் தற்போது 1000 திர்ஹம் வரையும் நீல நிற தனிநபர் உபயோக அட்டையில் 5000 திர்ஹம் வரை மட்டுமே முன்பணம் செலுத்த முடியும் என்றாலும் விரைவில் அனைத்து அட்டைகளிலும் 5000 திர்ஹம் வரை முன்பணம் டாப்அப் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் 5000திர்ஹம் வரை பொருட்களை சில்லறை கடைகளில் வாங்க முடியும் என்றும் இதனால் கையில் பணமாக கொண்டு செல்லும் பழக்கமும் பிரச்சனைகளும் (Risk) குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.