காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: தமிழகத்தில் அமைதி நிலவிடவும் சகோதரத்துவம் மேலோங்கிடவும் தமிழக அரசே நடவடிக்கை எடு!
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
சமீப காலங்களாக பாஜக - இந்துமுன்னணி போன்ற இந்துத்துவா இயக்க நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதும் அதன் பழியை சம்பந்தமே இல்லாமல் இன்னொரு சமூக...
சமீப காலங்களாக பாஜக - இந்துமுன்னணி போன்ற இந்துத்துவா இயக்க நிர்வாகிகள் கொலை செய்யப்படுவதும் அதன் பழியை சம்பந்தமே இல்லாமல் இன்னொரு சமூகத்தின் மீது சுமத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

காவல்துறையின் நேர்மையான விசாரணைகள் அனைத்துமே நடந்துள்ள கொலை சம்பவங்களின் உண்மை குற்றவாளிகளை பிடிக்க பெரிதும் உதவி வருகின்றன.

கொலைக்கான காரணங்கள் பெரும்பாலும் கட்ட பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் தொழில், பெண்கள் உடனான கள்ள தொடர்பு, உள்கட்சி மோதல் போன்றவையாகவே இருக்கின்றன.

தனி மனித ஒழுக்கமற்றவர்களை தங்களது அமைப்புகளின் மாநில-மாவட்ட-ஒன்றிய-நகர நிர்வாகிகளாக நியமனம் செய்யும் இந்துத்துவா அமைப்புகளின் செயல்பாடுகள் மக்களை முகம் சுளிக்க வைக்கிறது.

தனி மனித ஒழுங்கீன செயல்களால் நிகழும் கொலை பழிகளை சகோதரத்துவ சமூகத்துடன் தொடர்புபடுத்தி அவர்களின் உயிர், உடமைகளை சேதாரப்படுத்தும் வன்முறை நிகழ்வுகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

மீண்டும் ஒரு கோவை கலவரம் நிகழாமல் இருக்க உடனடியாக இந்துத்துவா அமைப்புகளில் இருக்கும் தாதாக்கள்,ரவுடிகள் போன்ற சமூக விரோத குண்டர்களை இனம் கண்டு அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

- கீழை ஜஹாங்கீர் அரூஸி.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top