vkrnajur vkrnajur Author
Title: புகார் கொடுத்த பெண்ணின் கணவரை திருமணம் செய்த பெண் போலீஸ் !
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்குபரணம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(40) சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங...
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்குபரணம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார்(40) சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் செலவக்குமாருக்கும் அவரது மனைவி லதாவுக்கு தொலைப்பேசியில் பேசும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனைவுடன் பேசுவதை நிறுத்திக்கொண்ட செல்வக்குமார், மாதந்தோறும் வீட்டுக்கு பணம் அனுப்புவதையும் நிறுத்திக்கொண்டார். செலவக்குமாருக்கு மூன்று குழந்தைகள். இதனால் லதா குடும்பம் நடத்த மிகவும் சிரமப்பட்டார்.
வீட்டுக்கு பணம் அனுப்ப கோரி உரவினர்களும் செல்வக்குமாரிடம் கூறியுள்ளனர். ஆனால் அப்போது அவர் பணம் அனுப்பவில்லை. இதனால் லதா, இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்துக்கு சென்று ராதிகா என்பவரிடம் புகார் அளித்தார்.
அதோடு செல்வக்குமாரின் தொலைப்பேசியின் எண்ணையும் கொடுத்து அவரிடம் பேசிமாறு கூறினார். புகார் செய்த 4 மாதங்கள் ஆகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனிடையே ராதிகா செலவக்குமாரின் பணம் அனுப்ப கூறுவதற்காக தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். 
இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி நாடு திரும்பிய செல்வக்குமார், 28ஆம் தேதி ராதிகாவை திருமணம் செய்துக்கொண்டார். இதை அறிந்த லதா ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து செல்வக்குமார் கைது செய்யப்பட்டார். ராதிகா தலைமறைவா உள்ளார். மேலும் ராதிகா ஏற்கனவே திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top