Mohamed Farook Mohamed Farook Author
Title: இஸ்லாமியர்களுக்கு வீடு வாடகைக்கு கிடையாது: இப்படியும் ஒரு விளம்பரமா?
Author: Mohamed Farook
Rating 5 of 5 Des:
சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீடு வாடகைக்கு விண்ணப்பிக்கலாம் என இணையத்தளம் மூலம் வீட்டு உரிமையாளர் ஒருவர் ...
சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்கள் வீடு வாடகைக்கு விண்ணப்பிக்கலாம் என இணையத்தளம் மூலம் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூரிச் நகரை சேர்ந்த வீட்டு உரிமையாளர் ஒருவர் தான் சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளார்.

இரண்டு அறைகள் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு விட Immoscout24 என்ற இணையத்தளத்தில் அவர் விளம்பரம் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இஸ்லாமியர்களை தவிர்த்து, சுவிஸ், ஜேர்மன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் வாடகைக்கு விண்ணப்பிக்கலாம்’ என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இனவெறியை தூண்டும் விதமான இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் வீட்டு உரிமையாளர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
‘இஸ்லாமியர் ஒரு நாளில் அடிக்கடி தொழுகையில் ஈடுப்படுவதும் பாடல்களை பாடுவதுமாக இருப்பதால் அவர்களுக்கு வீடு வாடகைக்கு கிடைக்காது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வீட்டு உரிமையாளரின் இந்த விளம்பரம் பொலிசார் வரை சென்றதை தொடர்ந்து அந்த விளம்பரம் உடனடியாக நீக்கப்பட்டது.
விளம்பரத்தை வெளியிட்ட இணையத்தளத்தை தொடர்புக்கொண்டபோது, ‘இணையத்தளத்தில் அடுத்தடுத்து சுமார் 80,000 விளம்பரங்கள் வெளியாவதால், சர்ச்சைக்குரிய விளம்பரங்களை இனம் கண்டு நீக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது’ என விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top