காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: வெளிநாடு வாழ் இந்தியர்கள் வீடு வாங்க தேவையான சான்றுகள்
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
என்.ஆர்.ஐ என்று சொல்லப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஆகிய காரணங்களுக்காக குறிப்பிட்ட நாட்டில் அரசு...
என்.ஆர்.ஐ என்று சொல்லப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ஆகிய காரணங்களுக்காக குறிப்பிட்ட நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து கொண்டிருப்பார்கள்.

பல்வேறு காரணங்கள் அடிப்படையில் தமது சொந்த நாட்டில் வீடு அல்லது மனை வாங்கலாம் என்று அவர்கள் முடிவு எடுப்பது வழக்கமான விஷயம். குறிப்பாக வெளிநாட்டில் பணி புரிந்து வரும் இளம் தலைமுறையினர் தங்கள் தாய்நாட்டில் அடுக்குமாடி வீடு அல்லது தனிவீடு வாங்குவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.


உள்நாட்டில் வசிக்கும் ஒருவர் சொத்து வாங்கினால் அல்லது விற்பனை செய்தால் அதன் நடைமுறைகள் எளிமையாக இருக்கும். ஆனால், அவரே என்.ஆர்.ஐ. எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியராக இருக்கும் பட்சத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றிலும் வேறாக இருக்கும். பெரும்பாலான வெளிநாடு வாழ் இந்தியர்கள் சொந்த மண்ணில் வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்பதை லட்சியமாகவே கொண்டுள்ளனர்.

பெரு நகரங்களில் கட்டப்பட்டிருக்கும் அதி நவீன வசதிகள் கொண்ட ‘பிளாட்’ எனப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், ‘வில்லா’ எனப்படும் தனி வீடுகள் ஆகியவற்றை வாங்க அவர்கள் விரும்புவதோடு, முதலீட்டு அடிப்படையில் கட்டுனர்களோடு இணைந்து பங்குதாரர்களாகவும் ஒருசிலர் மாறுகிறார்கள். 

அதன்மூலம் தங்களது நாட்டில் சொத்துக்களை வாங்கவும், அவற்றை விற்கவும் தொழில் ரீதியாக முயற்சி செய்கிறார்கள். வெளிநாடு வாழ் இந்தியர் இந்தியாவில் வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்கு என்னென்ன சான்றுகள் தேவை என்று ‘ரியல் எஸ்டேட்’ வல்லுனர்கள் குறிப்பிடுவதை இங்கே காணலாம்.

1. ‘பாஸ்போர்ட்’ மற்றும் அதன் ‘ஜெராக்ஸ்’ பிரதிகள்

2. நடப்பில் இருக்கும் ‘விசா’ மற்றும் அதன் ‘ஜெராக்ஸ்’ பிரதிகள்

3. ‘ஒர்க் பர்மிட்’ எனப்படும் சம்பந்தப்பட்ட நாட்டில் பணி புரிவதற்கான அனுமதி

4. ‘கான்ட்ராக்ட் ஆப் எம்ப்ளாய்மெண்ட்’ எனப்படும் குறிப்பிட்ட காலத்திற்கு, வெளிநாட்டு நிறுவனத்தில் பணி புரிவதற்கு அந்த நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தம்

5. பணியில் எத்தனை வருட அனுபவம் என்பதற்காக நிறுவனம் தரும் சான்றிதழ்

6. ‘சேலரி சர்டிபிகேட்’ எனப்படும் சம்பளச்சான்று (சம்பளமானது வங்கியில் செலுத்தப்படாமல் நேரடியாக தரப்படுகிறது எனும் பட்சத்தில் அது ‘இந்தியன்
எம்பஸி’ மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்)

7. கடந்த ஆறு மாதங்களுக்கான சம்பள சான்றுகள்

8. ‘என்.ஆர்.ஈ எனப்படும் ‘நான் ரெஸிடென்ட் எக்ஸ்டெர்னல்’ அல்லது
‘என்.ஆர்.ஓ’ எனப்படும் ‘நான் ரெஸிடென்ட் ஆர்டினரி’ வங்கி கணக்குகள் பற்றி கடந்த ஒரு ஆண்டிற்கான வங்கி சான்றிதழ்

9. ‘பவர் ஆப் அட்டர்னி’ பற்றிய தகவல்கள்

10. ‘ஓ.சி.ஐ’ எனப்படும் ‘ஓவர்சீஸ் சிட்டிசன்ஸிப் ஆப் இந்தியா’ அல்லது ‘பி.ஐ.ஓ’ எனப்படும் ‘பெர்சன்ஸ் ஆப் இன்டியன் ஆரிஜின்’ என்பதற்கான சான்று

11. ‘பான் கார்டு’ இருக்கும்பட்சத்தில் அதன் நகல்கள்

12. சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள முகவரிக்கான சான்று

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top