vkrnajur vkrnajur Author
Title: இரவில் நல்ல தூக்கம் கிடைக்க எந்த பானங்கள் பருகலாம்?
Author: vkrnajur
Rating 5 of 5 Des:
இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள்,...
இன்றைய இளைஞர்கள் தூக்கத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால் முறையற்ற தூக்கமும் குறைவான தூக்கமும் உடல் பருமன், ஹார்மோன் கோளாறுகள், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தல் போன்ற ஏராளமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
நல்ல தூக்கம் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். நல்ல தூக்கம் என்பது குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி வரை இருக்க வேண்டும்.
அப்படித் தூங்கச் செல்வதற்கு முன்பு நாம் பால் குடித்துவிட்டுச் செல்வதுண்டு. நல்ல தூக்கத்தைத் தரக்கூடிய மேலும் சில பானங்களை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
பால்:
தூங்குவதற்கு முன் பால் குடித்துவிட்டுச் செல்வது நல்ல தூக்கத்தைத் தரும். உடலுக்குத் தேவையான கால்சியமும் கிடைக்கும். நல்ல தூக்கம் இருந்தால் அடுத்த நாள் நாம் உண்ணும் உணவின் அளவு தானாகவே குறைந்துவிடும்.
கிரேப் ஜூஸ்:
தினமும் தூங்கச் செல்லும் முன் ஒரு சிறிய கிண்ணம் அளவுக்கு கிரேப் ஜூஸ் குடித்தால் நல்ல தூக்கம் வரும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகளையும் எரித்துவிடும். கெட்ட கொழுப்புகளை உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பாகவும் மாற்றிக் கொள்ளும்.
தேநீர்:
டீ குடித்தால் தூக்கம் கலைந்துவிடும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் உடலில் குளுக்கோஸின் அளவு கட்டுப்படுத்தப்படும். அது தூக்கத்தைத் தூண்டும். மேலும் உடலில் உள்ள கிளைசின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
சோயா புரோட்டீன் ஷேக்:
சோயா மில்க் பவுடரில் அமினோ ஆசிட் அதிக அளவு இருக்கிறது. இரவு தூங்கச் செல்லும் முன் குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top