Mohammed Farook Mohammed Farook Author
Title: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!
Author: Mohammed Farook
Rating 5 of 5 Des:
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவ...
கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ரிலையன்ஸ் அறிமுகப்படுத்திய ஜியோ சிம், தொலைத்தொடர்பு உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஏராளமான சலுகைகளை வழங்கி ஏகோபித்த வரவேற்பை பெற்ற ஜியோ சிம்மால்மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கலக்கமடைந்தன. 

அத்துடன், ஜியோவின் இந்த அறிவிப்புகளை எதிர்த்து மேல் முறையீடு செய்தன. கடந்த வாரம் இதனை விசாரித்த டிராய், ஜியோவின் இலவச வாய்ஸ் கால் சலுகை டிசம்பர் 3 வரை மட்டுமே செல்லுபடியாகும் என அறிவித்தது.

இந்நிலையில் ஜியோ தன்னுடைய பயனாளர்களை மேலும் அதிகரிக்கும் வகையில் இலவச 4ஜி சேவையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலவச சேவைக்கான கால அவகாசம் மூன்று மாதங்கள் மட்டுமே என டிராய் அறிவித்துள்ளதால் வெல்கம் ஆபர் என பெயரை மாற்றி இந்த சேவையை தொடர ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், ஜியோவின் டேட்டா சேவைகள் ஜிபி ஒன்றிற்கு ரூ.130-140 வரை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top