"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
13/10/16

ரயில் பயணத்தில் உள்ள மிகப் பெரிய சிக்கல், விருப்பமான, சுவையான, தரமான உணவு கிடைக்காதது தான். ரயில்வேயை நவீனமயமாக்கி வரும் மத்திய அரசு, பயணிகளின் இந்த பிரச்னைக்கும் தீர்வை கண்டு வருகிறது.ரயில்வேயின் துணை அமைப்பான, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், 'இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்' தரமான உணவுகளை அளிப்பதற்கான புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

முக்கிய ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், நாட்டின், ஆறு இடங்களில் பொது மெகா சமையலறையை அமைத்து வருகிறது.இங்கிருந்து, அருகில் உள்ள குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு உணவுகளை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் வசதிக்காக, பல்வேறு தனியார் உணவு சேவை நிறுவனங்களின் உதவியையும்ரயில்வே நாடியுள்ளது. அதன்படி, கே.எப்.சி., டொமினோஸ் பிட்சா உள்ளிட்ட பிரபல ஓட்டல்களின் உணவுகளை, பயணிகள் முன்பதிவு செய்ய முடியும். இந்நிலையில், பல்வேறு தனியார் மொபைல் ஆப் நிறுவனங்களும், இந்த உணவு சேவையில் களமிறங்கியுள்ளன.

 குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பிரபல ஓட்டல்களுடன் இணைந்து, விரும்பிய உணவை, சுடச் சுட அளித்து வருகின்றன. நீண்டதுார ரயில்கள், முக்கிய ரயில் நிலையங்களில், இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரையே நிற்கும். அந்த நேரத்துக்குள், மொபைல் ஆப் மூலம் ஆர்டர் கொடுத்தபயணியை சரியாக தேடிப் பிடித்து உணவு தரும் சேவையில், பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த புதிய வசதிகளுக்கு, சற்று கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருந்தாலும், இந்த சேவைக்கு பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

நன்றாக சாப்பிடுவது 6 சதவீதம் பேரேநாடு முழுவதும், சராசரியாக, தினமும், 2.3 கோடி பேர்ரயில்களில் பயணம் செய்கின்றனர்ரயில்வே, தினமும், 5,000 நீண்டதுார ரயில்களை இயக்குகிறது. இவை சராசரியாக, 770 கி.மீ., துாரத்துக்கு செல்கின்றனநீண்டதுார ரயில்களில் பயணம் செய்பவர்களில், 6 சதவீதம் பேருக்கு மட்டுமே தரமான உணவு கிடைக்கிறது.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.