7/10/16

காற்றுவழி தென்றலதே காலமதின் பூங்காற்று!
நாற்றுவழி பயிரதுவே நற்கால உணர்வூற்று!
ஏற்றமதின் எழிலுருவே எதிர்கால வழிகாட்டு!
ஆற்றுப்பெருக்காலே அரும்விடும் வளவாழ்வு!

சோற்றுப் பெருக்கால் தான் சுடர்கா‰ம் சுகவாழ்வு!
ஆற்றல் அனைத்துமே அடங்கிவிடும் இதனுள்ளே!
மனிதன் மாண்புபெற மனஒழுக்கம் வழிவாழ்வு!
புனிதம் புவனம்பெற பொற்காலம் அதன்வரவு!

இனிதாய் வாழ்வதெல்லாம் இதயத்தின் வளர் வாழ்வு!
அணிசேர் அமைவதற்கு அடிப்படை அறவாழ்வு!
கணிசமாய் முன்னேற முன்ப்பின் நினை வாழ்வு!
நனிசேர் நலம்பெறவே நம்புவதே இதன் ஆக்கம்!

அவனியெங்கும் சுற்றிவர ஆசையுண்டு - ஆனாலும்
ஆணிவேராய் முயற்சித்தால் - அதுகூட நிகழ்வாகும்!

பவனிவந்து பதவியிலே அமர ஆசை அதிகமுண்டு
படித்தரத்தில் பளிச்சிட்டால் அது கூட இலகுதான்!

துடிப்புடனே செயல்பட்டு தூயபணி தொடர்ந்திட்டால்
தூணாக இருந்திடலாம் தூயவர்வழி வாழ்ந்திடலாம்.

அவனியிலே வாழ்ந்தோர்கள் ஆற்றலுற்றோர் வெற்றிப்பெற்றார்
அன்பின் அரவணைப்பில் அகம் கண்டோர் சுகம் கண்டோர்!
நவமணியாய் நாடுபோற்ற நற்பணியே வழிகாட்டும்!

நல்லதையே செய்யும் எண்ணம் வல்லமையாய் விழிக்காட்டும்!
வல்லமையாய் வாய்மைநின்றால் வளர்ந்துவிடும் தூய்மை எண்ணம்.
பொல்லாத குணம் விட்டால் புகுந்திடுமே புகழ் மூட்டம்!
காலத்தை வென்றுவிட காலமும் மனம் வேண்டாம்!

காலம் நம்மைவென்று விடும் கருத்திலே கொண்டிடுவோம்
சீலம் நமதானால் செழிப்பு வரும் தன்னாலே!

கோலம் குணமானால் கோலோச்சி வாழ்ந்திடலாம்!
நீலநிறம் வானம் எனில் நம்பினால் சிலநொடியில்
நீந்திவரும் பல நிறங்கள் - பார்த்திடுவோம் இதுதான் உலகம்!

- முஸ்லிம் முரசு டிசம்பர் 2015

அபிவிர்த்தீஸ்வரம் தாஜுத்தீன்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

வி.களத்தூர் செய்தி

.

.