"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன்- 3:31,32)
11/10/16

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதனால், உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 17, 19ம் தேதிகளில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது; போட்டியிட, 4.97 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிச., 31க்குள் தேர்தல் நடத்தி முடிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், வட கிழக்கு பருவமழை வரும், 20ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பருவமழை காலத்தில், தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை, பருவமழைக்கு முன் நடத்தி முடிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது; அதற்கு, தடை விதிக்கப்பட்டு விட்டது. இப்போது, பருவமழை காலத்தில், தேர்தல் நடத்த வேண்டியுள்ளது; அது, சிரமம். எனவே, தேர்தலை தள்ளிப் போடுவது சம்பந்தமாக, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

0 comments:

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.