காமெடி தர்பார் காமெடி தர்பார் Author
Title: மகள் ஐ.சி.யூ. வார்டில் சிகிச்சை பெற்ற போதிலும் இந்தியாவின் வெற்றிக்காக விளையாடிய மொகமது ஷமி
Author: காமெடி தர்பார்
Rating 5 of 5 Des:
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 30-ந்...
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. 2-வது டெஸ்ட் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. 3-ந்தேதி மாலை 4-வது நாளுடன் ஆட்டம் முடிவடைந்தது. இந்தியா 178 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு மொகமது ஷமியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது. தனது ரிவர்ஸ் ஸ்விங் பந்து வீச்சு மூலம் இரண்டு இன்னிங்சில் தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்திய அணி மற்றும் ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், மொகமது ஷமி தனது குழந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு ஐ.சி.யூ. வார்டில் சேர்க்கப்பட்டிருந்த நிலையிலும் அணியின் வெற்றிக்காக விளையாடியது தற்போது தெரியவந்துள்ளது.

மொகமது ஷமிக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி திருமணம் முடிந்தது. கடந்த ஆண்டு ஜூலை 17-ந்தேதி ஷமி- ஹசீன் ஜஹன் தம்பதிக்கு அயிரா என்ற பெண் குழந்தை பிறந்தது.

14 மாதமே ஆகும் ஷமியின் குழந்தை அயிரா கடும் காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த தகவல் ஷமிக்கு தெரியவந்ததும், போட்டி முடிந்த பின் மருத்துவமனைக்கு சென்று மகளை பார்த்துள்ளார்.

பின்னர் காலையில் மைதானத்திற்கு திரும்பி விளையாடியுள்ளார். இப்படி மருத்துவமனைக்குச் சென்று வந்து அணிக்காக விளையாடியுள்ளார். 3-ந்தேதி மாலை இந்தியா வெற்றி பெற்ற போது, அயிரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன செய்தி அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகள் ஐ.சி.யூ. வார்டில் சேர்க்கப்பட்ட நிலையிலும் அணிக்காக விளையாடிய மொகமது ஷமியின் மனஉறுதி அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

About Author

Advertisement

கருத்துரையிடுக

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

 
Top